For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரோலக்ஸ் ரோலுக்கு லோகேஷ் என்னை தான் நினைச்சார்...முதல் முறையாக ஓப்பனாக சொன்ன பிரபலம்

  |

  சென்னை : விக்ரம் படம் பற்றி புது புது தகவல்கள் வெளியில் வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் விக்ரம் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் செய்திருந்த ஐடியா பற்றிய புதிய தகவல் ஒன்றை பிரபல ஹீரோ ஒருவர் ஓப்பனாக சொல்லி உள்ளார்.

  Recommended Video

  Vikram படம் BlockBuster-க்கும் மேல! Devi Sri Prasad | Kamal Haasan *Kollywood | Filmibeat Tamil

  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாகி, தற்போது வரை சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு வாரங்களில் 400 கோடிகளை வசூல் செய்த விக்ரம் படம் நாளை 25வது நாளை எட்ட உள்ளது.

  படத்தின் 25வது நாள் கொண்டாட்டத்திற்கு முன்பாகவே படக்குழுவினர் சக்சஸ் மீட் நடத்தி விட்டனர். ரசிகர்கள் விக்ரமின் வசூல் சாதனையை தினம் தினம் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் இன்னும் எத்தனை சாதனைகளை முறியடிக்க போகிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஆவலாக உள்ளது.

  அஜித் தான் அந்த கேரக்டரில் நடிக்க சொன்னாரு.. அந்த கேரக்டர் என்னோட கேரியர் பெஸ்ட்டா அமைந்தது!அஜித் தான் அந்த கேரக்டரில் நடிக்க சொன்னாரு.. அந்த கேரக்டர் என்னோட கேரியர் பெஸ்ட்டா அமைந்தது!

  ரோலக்சாகவே மாறிய சூர்யா

  ரோலக்சாகவே மாறிய சூர்யா

  விக்ரம் படத்தை பொருத்தவரை முதலில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பது கமல். அவருக்கு பிறகு படத்தில் அதிகம் பேசப்பட்ட கேரக்டர் க்ளைமாக்சில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் தான். இப்போது வரை ரசிகர்கள் மட்டுமல்ல பிரபலங்களே சூர்யாவை ரோலக்ஸ் என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டது அந்த கேரக்டர் மற்றும் பெயர்.

  ப்ருவிராஜின் கடுவா

  ப்ருவிராஜின் கடுவா

  இந்நிலையில் மலையாளத்தில் சமீபத்தில் ரிலீசான கடுவா படத்திற்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் மீடியா ஒன்றிற்கு தமிழில் பேட்டி அளித்துள்ளார் நடிகர் ப்ருத்விராஜ். மலையாளத்தில் டைரக்டர் சைஜி கைலாஷ் இயக்கி உள்ள கடுவா படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ரப்பர் தோட்டத்துறையில் டானாக இருப்பவர் பற்றிய கதை. இந்த படத்தில் ப்ருத்விராஜ், விவேக் ஓபராய், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

  ரோலக்சிற்காக லோகேஷின் தேர்வு

  ரோலக்சிற்காக லோகேஷின் தேர்வு

  சமீபத்தில் பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜிடம் விக்ரம் படத்தில் ரோலக்ஸ், சந்தானம் கேரக்டர்களில் மலையாள நடிகர்கள் யாரையாவது நடிக்க வைக்க வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கொஞ்சமும் யோசிக்காமல், ரோலக்ஸ் ரோலிற்கு ப்ருவித்ராஜ் என கூறினார். லோகேஷ் சொன்னது பற்றி ப்ருத்விராஜிடம் கேட்கப்பட்டது. அவர் சந்தோஷத்தில் ரோலக்ஸ் ரோலிற்கு என் பெயரை சொல்லி இருப்பது ரொம்ப சந்தோஷமாக உள்ளது என்றார்.

  மலையாளத்தில் விக்ரம் எடுத்தால்

  மலையாளத்தில் விக்ரம் எடுத்தால்

  மலையாளத்தில் நீங்கள் விக்ரம் படத்தை எடுத்தால் யாரை ரோலக்ஸ் ரோலில் நடிக்க வைப்பீர்கள் என ப்ருத்விராஜிடம் கேட்டதற்கு,நான் டைரக்டர் என்பதால் என்னை தவிர மற்றவர்களை சொல்கிறேன். துல்கர் சல்மான் என்றார். மேலும் பேட்டியில் அவர் கூறுகையில் பல இடங்களில் விக்ரம் படத்தை மேற்கோள் காட்டி பேசினார். மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களுக்கு கதை எழுதுவது பற்றி கேட்கும் போது, நான் நடிகரை மனதில் வைத்து ஒரு போதும் கதை தயார் செய்ய மாட்டேன். கதை உருவாகிக் கொண்டிருக்கையில் ஒரு இடத்தில் இதில் மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும்.

  நீங்க எல்லாம் சின்ன பசங்கடா

  நீங்க எல்லாம் சின்ன பசங்கடா

  பழைய மோகன்லாலை பார்க்க வேண்டும் என பலரும் கூறுகிறார்கள். என்னை பொருத்தவரை அப்படி சொல்வதை ஒரு நடிகரை அவமானப்படுத்துவது போல். எதற்காக பழைய மோகன்லாலை பார்க்க வேண்டும். புதிய மோகன்லாலை பார்க்க வேண்டும் என சொல்லுங்க. விக்ரம் படத்தை எடுத்துக் கொண்டால் லோகேஷ் காட்சி, கதை அமைத்திருப்பது அத்தனை புதிது. கமலும் புதிய கமலாக தோன்றுகிறது. ஆனால் அவர் பெரிய ஜீனியஸ். அவருக்கு, நீங்க எல்லாம் சின்ன பசங்கடா. இதுக்கு மேலயே நாங்க பார்த்திருக்கோம் என்று தானே மனதில் தோன்றும் என்றார்.

  English summary
  In his recent interview Malayalam actor Prithviraj Sukumaran said that very happy to know that Lokesh tells his name for Rolex role. If he make Vikram in Malayalam, he choose Dulqar for Rolex character. He also mentioned Vikram movie as example for many things in his interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X