தளபதி 67 அறிவிப்புக்காகதான் வெயிட்டிங்.. வந்தா உடனே சொல்லிடுவேன்.. எதைப்பற்றி சொல்லியிருக்காரு லோகேஷ்!
சென்னை : நடிகர் விஜய்யின் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் படத்தின் அறிவிப்பை தயாரிப்பு தரப்பு இன்னும் வெளியிடாமல் உள்ளது.
தற்போது விஜய் நடித்துவரும் வாரிசு படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் தளபதி 67 அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வசூல் ரீதியான வெற்றி மற்றும் கலவையான விமர்சனம் இரண்டையும் கருத்தில் கொண்டுள்ளார். தற்போது வாரிசு படத்தின் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் நடித்துவரும் அவர், படத்தை வெற்றிப்படமாக்க உழைத்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டில் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் சூட்டிங்
படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்ட நிலையில் தொடர்ந்து ஐதராபாத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது. இதையடுத்து தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஒரு கெட்டப்பே போஸ்டர்களில் வெளியாகியுள்ளது.

முக்கிய நடிகர்கள்
இந்நிலையில் படத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் குஷ்பூ, ராதிகா உள்ளிட்டவர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையதளத்தில் லீக்கான நிலையில் தற்போது மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

லோகேஷுடன் இணையும் விஜய்
இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் இணையவுள்ளார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த மாதம் விஜய் பிறந்தநாளிலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விக்ரம் படத்தின் சிறப்பான வெற்றி, இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Recommended Video

லோகேஷ் யூனிவர்சில் இணையுமா தளபதி 67?
இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் வயதான கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சமந்தா விஜய்க்கு ஜோடியாகவுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இடம்பெறுமா என்பது குறித்து அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அறிவிப்பு வந்தவுடன் தெளிவுபடுத்துவேன்
இதுகுறித்த தற்போதைய பேட்டியில் பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், படம் குறித்த அறிவிப்பு வரும்வரை இதை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளதாகவும் படம் குறித்த அறிவிப்பு வெளியான அன்றைய தினம் மாலையிலேயே இதுகுறித்து அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் மரண மாசாக வெயிட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











