Vijay: விஜய் லாலிபாப் பேபியா? விஜயகாந்த் மனைவிக்கு எதிராக களமிறங்கிய விமர்சகர்கள்

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மிகவும் விறுவிறுப்பாகவே உள்ளது. தேர்தல் என்றாலே தமிழ்நாடு அனல் பறக்கும் என்பது கடந்த காலங்களில் இருந்தாலும், இம்முறை அந்த அனலை அதிகரிக்கச் செய்துள்ளார் நடிகர் விஜய். நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கவுள்ளார் என்று பல அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, தேமுதிக பொதுச் செயலாலரும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, நடிகர் விஜய்யை லாலிபாப் பேபி என்று விமர்சித்துள்ளார். அவரது இந்த விமர்சனத்திற்கு விமர்சகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், " சினிமாவில் தான் நீங்க ஹீரோ, திமுக 75 ஆண்டு கால கட்சி. அரசியலில் நீங்க லாலிபாப் சாப்பிடும் பேபி. அரசியலில் நீங்க ஹீரோ கிடையாது. முதலில் உங்கள் வாக்கு வங்கியை நிரூபியுங்கள். அதன் பின்னர் திமுகவா தவெகவா என்ற டயலாக்கை பேசுங்கள் " என்று சேலத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனங்களையும் பதிலடிகளையும் கொடுத்து வருகின்றனர்.

Lollipop Baby Remark on Vijay Sparks Backlash Critics Hit Back at Premalatha Vijayakanth

இரண்டு சீட்டுக்காக: இப்படி இருக்கையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் பிரேமலதா விஜய்காந்தின் பேச்சுக்கு தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, " எந்த கட்சியாக இருந்தாலும்.. அது ஆரம்பத்தில் லாலிபாப் பேபிதான். ஒரு ராஜ்யசபா மற்றும் இரு எம்எல்ஏ சீட்டுக்காக.. குடும்ப நலன் கருதி.. அவர் யாருடனும் கூட்டணி வைக்கவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

வடிவேலுவை வைத்து: அதேபோல் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில், " இதே போல ஒரு மேடையில் - வடிவேலுவை விட்டு அய்யா விஜயகாந்தை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்கள் . நீங்க அதே மேடையில் எல்லாம் மறந்து , விஜயை விமர்சனம் செய்கிறீர்கள் ! மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் - நிச்சயம் சிறப்பாக ஒரு தீர்ப்பு எழுதுவார்கள் " என்று பதிவிட்டுள்ளார்.

Lollipop Baby Remark on Vijay Sparks Backlash Critics Hit Back at Premalatha Vijayakanth

கேப்டன் மறைவுக்குப் பிறகு: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் இவர்களுக்கு 10 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 2023ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின்னர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேமுதிக அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தது. தற்போது திமுக கூட்டணியில் களமிறங்கி உள்ளது. தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைப்பது இதுவே முதல்முறை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X