அது நான் இல்லைங்க.. நான் நல்லாதான் இருக்கேன்.. பதறிய லொள்ளு சபா மாறன்!
சென்னை: தான் நலமுடன் இருப்பதாக நடிகர் லொள்ளு சபா மாறன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாறன். பல படங்களில் நடித்துள்ள இவர் லொள்ளு சபா மாறன் என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
சந்தானத்தின் ஏ1 படத்தில் அவருக்கு மாமாவாக நடித்திருப்பார் லொள்ளு சபா மாறன். தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.

மாறன் மரணம்
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கில்லி, டிஷ்யூம், வேட்டைக்காரன், கேஜிஎஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்த செங்கல்பட்டை சேர்ந்த நடிகர் மாறன் மரணமடைந்தார்.

சிகிச்சை பலனின்றி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துணை நடிகர் மாறன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

பெயரால் குழப்பம்
அவரது மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மறைந்த நடிகர் மாறனுக்கு பதில், லொள்ளு சபா மாறன்தான் இறந்துவிட்டதாக கூறி அவருடைய படங்களுடன் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

லொள்ளு சபா மாறன் விளக்கம்
சமூக வலைதளங்களிலும் லொள்ளு சபா மாறனின் படத்துடன் செய்திகள் பரவி வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள லொள்ளு சபா மாறன், தான் நலமுடன் இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.

தவறை செய்து விட்டார்கள்
அந்த மாறன் தான் இல்லை என்றும் அது வேற மாறன் என்றும் கூறியுள்ள லொள்ளு சபா மாறன், சில ஊடகங்கள் தன் படத்துடன் செய்திகளை வெளியிட்டன. பின்னர் நான் இல்லை என்று தெரிந்ததும் தவறை சரிசெய்து விட்டார்கள்.

பிரபலங்கள் மரணம்
மாறன், அண்ணன் நெல்லை சிவா என தினமும் தமிழ் சினிமாவில் ஏற்படும் மரணங்கள் வேதனையாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது என கூறியுள்ளார் லொள்ளு சபா மாறன். சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி, மாறன் ஆகியோர் கொரோனாவால் மரணம்


Click it and Unblock the Notifications