’லொள்ளு சபா’ நகைச்சுவை நடிகர் வெங்கட்ராஜ் உயிரிழந்தார்!

சென்னை: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான காமெடி நடிகர் வெங்கட்ராஜ் சற்று முன் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பு ஆகவில்லை என்றாலும், இன்று வரை மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. சந்தானம், யோகி பாபு, சுவாமிநாதன், மாறன் போன்ற பல நட்சத்திரங்களை இந்த நிகழ்ச்சி கொடுத்துள்ளது.

நடிகர் வெங்கட்ராஜ்: லொள்ளு சபா நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகர் வெங்கட்ராஜ், இவர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக மனிதன் படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக வந்து அனைவரையும் சிரிக்க வைத்து இருப்பார். மேலும், மெட்ரோ, சைத்தான், எனக்கு வாய்த்த அடிமைகள், டாகால்டி, டிக்கிலோனா, உறுதி என திரைப்படங்களில் நடித்துள்ளார்.

lollu Sabha Venkataraj Death

உயிரிழந்தார்: இந்த நிலையில், நடிகர் வெங்கட்ராஜ் சற்று முன் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தையும், தொலைக்காட்சி ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனித்த உடல் மொழி, நேர்த்தியான டைமிங், இயல்பான நகைச்சுவை ஆகியவற்றால் லொள்ளு சபா ஸ்கிட்களில் வெங்கட்ராஜ் பார்வையாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர். நகைச்சுவை மட்டுமல்லாமல், கதாபாத்திரத்தின் உணர்வுகளையும் நுட்பமாக வெளிப்படுத்தும் அவரது நடிப்பு திறமை அனைவராலும் பாராட்டப்பட்டது.

அவரது மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திரையுலகினர், சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "ஒரு திறமையான காமெடி நடிகரை இழந்துவிட்டோம்", "லொள்ளு சபாவின் மறக்க முடியாத முகம்" என பலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: death
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X