Don't Miss!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Lifestyle Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
லொள்ளுசபா டீமின் 'மாப்பிள்ளை விநாயகர்': ‘முந்தானை முடிச்சு’ பார்ட் 2
நடிகர் பாக்யராஜ்-ஊர்வசி நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற படம் 'முந்தானை முடிச்சு'. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் அனைத்து பாடல்களும் பயங்கர ஹிட்டாகின. இப்படத்தில் வரும் முருங்கைக்காய் சமாச்சாரம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. இந்த படத்திற்கு பிறகு முருங்கைக்காய் விற்பனை அதிகரித்தது வேறு சமாச்சாரம். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்த படத்தில் விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ஜீவா கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார்.
இந்த படத்தில் முதல் பகுதியில் நடித்த பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். மேலும் பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இவர்களைத் தவிர எப்.எம். பாலாஜி, மனோபாலா, சிங்கமுத்து போன்ற காமெடிநாயகர்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
மொத்தத்தில் இது முந்தானை முடிச்சு பார்ட் 2 காமெடி பட்டாசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு 'மாப்பிள்ளை விநாயகர்' என்று பெயரிட்டிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. 'டூ' படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன் இயக்குகிறார். அபிஷேக் இசையமைக்கிறார்.
ஏற்கனவே சந்தானம், பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பாக்கியராஜ் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது. பிரச்சினையும் ஏற்பட்டது. இப்போது பாக்கியராஜ் நடித்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது அதில் பாக்கியராஜூடன் சந்தானம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!