கில்லி ரீ ரிலீஸ்.. ஸ்க்ரீனுக்கு முன்பாக ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்கள்.. கொத்தாக தூக்கிய போலீஸ்.. ஏன்?
லண்டன்: உலகம் முழுவதும் விஜய்யின் கில்லி ரீ ரிலீஸ் தியேட்டர்களில் ஒரு வார காலமாக தெறிக்கவிட்டு வருகிறது. நம்ம ஊரில் தான் பல முறை சன் டிவியில் கில்லி படத்தை பார்த்தாலும் மீண்டும் அந்த படத்தை தளபதி ரசிகர்கள் வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள் என்றால், நியூயார்க், லண்டன், சிங்கப்பூர் என ஓவர்சீஸிலும் விஜய் ரசிகர்கள் அலப்பறை தாங்கவில்லை.
ஒரே சூரியன் ஒரே "அப்படி போடு" என அந்த பாடலை எழுதிய பா. விஜய் சமீபத்திய பேட்டியில் சொன்னதை போல ஒட்டுமொத்த தியேட்டரும் அந்த பாடலுக்கு ஸ்க்ரீனுக்கு முன்பாக வந்து டான்ஸ் ஆடி வருகின்றனர்.

பிரபல நடிகைகள், நடிகைகளின் வாரிசுகள் என பலரும் ஆட்டம் போடும் வீடியோக்கள் தீயாக பரவி வரும் நிலையில், லண்டன் தியேட்டரில் படத்தை திடீரென நிறுத்தி விட்டு உள்ளே புகுந்த போலீஸார் சில ரசிகர்களை கைது செய்து அழைத்துச் சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளன.
வசூல் மன்னன் விஜய்: புதிய படங்கள் அளவுக்கு டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படவில்லை என்றும், ஆனால் இதுவரை வந்த ரசிகர்கள் கூட்டம் காரணமாக 110 ரூபாய்க்கு கில்லி படத்துக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டே 10 கோடி ரூபாய்க்கு மேல் தமிழ்நாட்டில் வசூல் செய்திருப்பதாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி உரிமையாளர் சக்திவேலன் பேட்டியில் கூறியுள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்து வருடத்திற்கு ஒரு படமாவது நடியுங்கள் என கோரிக்கை வைத்ததும் இவர்தான். புதிய படங்களுக்கு விற்கப்படும் அளவுக்கு டிக்கெட் விற்பனை இருந்தால் 20 முதல் 30 கோடி ரூபாய் வசூலை கில்லி ரீ ரிலீஸ் தமிழ்நாட்டில் செய்திருக்கும் என தெரிவித்துள்ளார்.
லண்டனில் அலப்பறை: மல்டி பிளக்ஸ் தியேட்டரிலேயே படங்களை மயான அமைதியாக பார்ப்பார்களே என நினைத்த ரசிகர்களுக்கு லண்டனில் உள்ள பிரபல திரையரங்கில் சுமார் 600 பேருக்கு மேல் தியேட்டர் ஸ்கிரீனுக்கு அருகே வந்து கில்லி படத்தின் அப்படி போடு பாடலுக்கு நடனமாடிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. இது முதல் நாள் இல்லை என்றும் நேற்றைய கொண்டாட்டம் என்றும் கூறுகின்றனர்.
கொத்தாக தூக்கிய போலீஸ்: லண்டனில் தியேட்டருக்குள் ரகசியமாக மதுபானங்களை எடுத்து வந்து சரக்கு அடித்து கில்லி படத்தை பார்த்து எல்லை மீறி சில ரசிகர்கள் ஆட்டம் போட்ட நிலையில், அது தொடர்பாக காவல்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரின் பேரில் படம் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போலீசார் அந்த இளைஞர்களை கொத்தாக தூக்கி செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அவங்களுக்கு லண்டன் போலீஸ் எப்படி போடுவாங்களோ?


Click it and Unblock the Notifications











