மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாதவன் படம்...வெளியானது புதிய அப்டேட்
சென்னை : 'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா' படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, நெகட்டிவ் கேரக்டரில் மாதவன் நடித்த 'சைலன்ஸ்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த 'மாறா' படம் நேரடியாக ஓடிடி.,யில் வெளியிடப்பட்ட போதிலும் ரசிகர்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றது.
மாதவன் முதல் முறையாக டைரக்டர் செய்து, நடித்துள்ள 'ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்' படம் சில மாதங்களுக்கு முன் முடிவடைந்து விட்டது. ஆனால் மற்ற படங்களைப் போலவே இந்த படமும் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் செய்யப்படவில்லை.

டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்நிலையில் ஏப்ரல் 1 ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் டிரைலர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 6 மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பி நாராயணன் கதை
'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' படம், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். நம்பி நாராயணன் தவறுதலாக ஒரு வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.

மீண்டும் வந்தார் சிம்ரன்
பல ஆண்டு கால சிறைவாசத்திற்கு பிறகே அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. இந்த கதையில் மாதவன், வித்தியாசமான லுக்கில் நடித்துள்ளார். இதில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார்.

சிறப்பு தோற்றத்தில் சூர்யா
இந்த படத்தில் ஷாருக்கான், சூர்யா ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். மாதவனுடன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











