நம்பிக்கையோட முன்னோக்கி நடைபோடுங்க... ரம்யா பாண்டியன் அட்வைஸ்
சென்னை : கடந்த 2016ல் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.
தொடர்ந்து பிக் பாஸ் உள்ளிட்ட விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களிடம் பிரபலமானார்.
ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டுவரும் அவர் தற்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வாய்ப்புகள் இல்லாத ரம்யா
கடந்த 2016ல் ஜோக்கர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்த திரைப்படம் அந்த ஆண்டிற்கான தேசிய விருதை பெற்றது. ஆயினும் ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கதவை தட்டவில்லை. ஒருகட்டத்தில் வெறுத்துப்போன இவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தார்.

சிறப்பாக பயன்படுத்திய ரம்யா
குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு மற்றும் தொடர்ந்து பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார் ரம்யா. தொடர்ந்து தற்போது இவருக்கு சூர்யா தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

போட்டோஷூட் புகைப்படங்கள்
பிரபல ஆங்கில பத்திரிகையின் தொலைக்காட்சியில் உள்ள அழகான பெண்கள் தலைப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில் முதலிடத்தை பிடித்துள்ள ரம்யா பாண்டியன், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் மிகவும் பிசி. அவ்வப்போது போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
நம்பிக்கை பதிவு
இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய அழகான புகைப்படத்துடன் செய்துள்ள ட்விட்டர் பதிவு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. அவநம்பிக்கையுடன் இல்லாமல் நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். அதைவிட அவர் பதிவிட்டுள்ள அவரது புகைப்படம் நம்பிக்கையை அளிக்கும்வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications











