twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலைத்தாயின் செல்லப்பிள்ளைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    |

    சென்னை: இன்று நவம்பர் ஏழாம் தேதி தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் நம்ம உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்.

    1960 இல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கமலஹாசன்.

    Look up to the universal hero Mr Kamal Hassans 60 years of cinema life

    ஐந்து வயதில் கலைத்துறையில் காலடி வைத்த கமலஹாசன் அவர்கள் இன்று 60 வருடங்கள் கடந்தும் கலை சேவையை தொடர்ந்து இப்பொழுது மக்களுக்கும் சேவை செய்து வருகிறார். இவர் நடிகர் மட்டும் இல்லைங்க சிறந்த நடன கலைஞர் கதாசிரியர் ,இயக்குனர், பாடகர், திரைக்கதையாசிரியர் என பல்வேறு துறைகளிலும் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    சிற்பி சிலையை செதுக்குவது போல தன்னை ஒரு நல்ல கலைஞனாக மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

    Look up to the universal hero Mr Kamal Hassans 60 years of cinema life

    அவர் ஹீரோவாக நடித்த அபூர்வராகங்கள் இந்தப் படத்தை இயக்கியவர் கே. பாலச்சந்தர். பின்னர் படிப்படியாக 16 வயதினிலே , நாயகன் ஹேராம் , விருமாண்டி, விஸ்வரூபம், தசாவதாரம், இந்தியன், அவ்வை சண்முகி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், புன்னகை மன்னன் ,காதலா காதலா, பஞ்சதந்திரம் என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

    கமல்ஹாசன் அவர்களுக்கு சினிமா என்பது அவர் சுவாசிக்கும் காற்றாகவே மாறிவிட்டது. சினிமாவைப் பற்றி பல விஷயங்களை அறிந்து வைத்திருந்தார் நடிகர் கமலஹாசன்.

    Look up to the universal hero Mr Kamal Hassans 60 years of cinema life

    கலை மேலிருக்கும் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு அவரை கலைத்தாயின் பிள்ளையாகவே எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

    தன்னுடைய திறமையால் உலகக் கலைஞர்கள் அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் நடிகர் கமல்ஹாசன்.

    சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள். இவர் நடித்த படத்திற்காக 3 முறை தேசிய விருது ,பத்மஸ்ரீ பத்மபூஷண் , கலைமாமணி விருது ஆகிய விருதுகளும் பெற்றிருக்கிறார். பதினைந்தாவது மும்பை இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் இவருக்கு வாழ்நாள் சாதனை விருது கொடுத்து கௌரவப்படுத்தி இருக்காங்க.

    Look up to the universal hero Mr Kamal Hassans 60 years of cinema life

    தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் நட்போடு பழகுவார் நடிகர் கமலஹாசன். சினிமா துறையில் கலைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்பவர் நடிகர் கமலஹாசன்.

    நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.. ரசணை மிகுந்த ரகசிய கவிஞன்.. உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு!

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ,விஜய் ,சூர்யா ,விக்ரம், தனுஷ், பிரபு, ஜெயராம் ,மம்மூட்டி, மோகன்லால் ,அமிதாப்பச்சன், ஜாக்கி சான் அவர்கள் அமீர்கான் ,சல்மான்கான், சிரஞ்சீவி ,வெங்கடேஷ் , டைரக்டர் ஷங்கர் , பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம், பாலுமகேந்திரா, ஏசுதாஸ், மனோரமா ஆச்சி அவர்கள் இவர்கள் எல்லோரும் கமல்ஹாசனை சினிமா என்சைக்ளோபீடியா வாகத்தான் கருதுகிறார்கள். சினிமாவை பற்றி அவருக்கு தெரியாத விஷயம் ஏதாவது இருக்குமா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் இருக்குங்க அந்த அளவுக்கு தன்னுடைய உயிர்மூச்சாக 24 மணிநேரமும் சினிமாவை பற்றியே சிந்திக்கும் ஒரே கலைஞன் நம்முடைய கமலஹாசன் அவர்கள் மட்டும் என்று சொன்னால் அது மிகையாகாது.

    Look up to the universal hero Mr Kamal Hassans 60 years of cinema life

    கலைக்காக இத்தனை வருடங்கள் சேவை செய்த நடிகர் கமலஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கி தலைவராக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்திருக்கிறார். ஆனாலும் தன்னுடைய கலை பயணத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் என்ற ப்ரொடக்ஷன் கம்பெனி மூலமாக செய்துகொண்டிருக்கிறார்.

    English summary
    The universal hero,now makkal needhi mandram president Kamal Hassan's 60 years of cinema life. It is the proud moment for Indian cinema to have Kamal Hassan in our industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X