பெரிய குடும்பத்து ஹீரோயினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்களாம்.. உறுதிப்படுத்திய நடிகையின் அப்பா!

By

சென்னை: பிரபல நடிகைக்கு மாப்பிள்ளைப் பார்த்துக்கொண்டிருப்பதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், நிஹரிகா கோனிடெலா.

இவர் தெலுங்கு சினிமாவின் பெரிய குடும்பமான, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாவுவின் மகள்.

நாகபாபு மகள்

நாகபாபு மகள்

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாகபாபு, தமிழில், வேட்டை, விழித்திரு, இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அவர் மகள் நிஹரிகா, நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க மனசு மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், நிஹரிகா.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

அடுத்து ஹேப்பி வெட்டிங், சூர்யகாந்தம், சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 'பிங்க் எலிபேன்ட் பிக்சர்ஸ்' எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நன்னா கூச்சி, மேட் ஹவுஸ் ஆகிய வெப்சீரிஸ்களையும் தயாரித்து நடித்துள்ள நிஹரிகா, இப்போது தமிழில் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார்.

லியோன் ஜேம்ஸ்

லியோன் ஜேம்ஸ்

இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருந்தார் நிஹரிகா. ஸ்வாதினி இயக்கும் இந்தப் படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். நடிகை நிஹரிகாவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமீபத்தில் வதந்திகள் வெளியாயின. அதை அவர் மறுத்திருந்தார்.

Recommended Video

Rana Daggubati Fiance Bio- Data | Rana Miheeka Bajaj, Marriage date
திருமணம்

திருமணம்

இந்நிலையில் நிஹரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவர் தந்தை நாகபாபு தெரிவித்துள்ளார். சரியான நபரை தேடி வருகிறோம். அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். நிஹரிகா, தெலுங்கு ஹீரோ நாக சவுரியா உட்பட சிலருடன் கிசுகிசுக்கப் பட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X