இதெல்லாம் நல்லதுக்கில்ல... இந்த வாரம் இந்தி, அடுத்த வாரம், தம்பி... இயக்குனர் வருத்தம்!
சென்னை: ஜீத்து ஜோசப் இயக்கியுள்ள 'தம்பி' படமும் 'த பாடி' என்ற இந்தி படமும் ஒரு வார இடைவெளியில் ரிலீஸ் ஆகிறது.
மோகன்லால், மீனா நடித்த த்ரிஷ்யம் படம் மூலம் கவனிக்கப்பட்டவர், மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். இந்த படம் இந்தி உட்பட 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தப் படம் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதை ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார்.

இப்போது கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தைத் தமிழில் இயக்கியுள்ளார். இதில் சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இதற்கிடையே அவர் இயக்கியுள்ள இந்தி படம், 'த பாடி'. வயாகாம் 18 நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம், வேதிகா இந்தியில் அறிமுகமாகிறார். இம்ரான் ஹாஸ்மி, ரிஷி கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
மிஸ்டரி த்ரில்லர் படமான இது, 2012 ஆம் ஆண்டு வெளியான, த பாடி என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஒரு வார இடைவெளியில் தனது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவது பற்றி ஜீத்து ஜோசப் கூறும்போது, ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களின் ரிலீசை சமாளிப்பது அழுத்தம் நிறைந்ததுதான். போஸ்ட் புரொடக்ஷன் முக்கியம். அதனால் இதைச் சொன்னேன். ஆனால், இது எதிர்பாராதது.
'த பாடி' படம் போன வருடமே முடிந்துவிட்டது. கொஞ்சம் பேட்ச்வொர்க் பாக்கி இருந்தது. ரிஷி கபூருக்கு உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுவிட்டார். அதனால்தான் காலதாமதமாகிவிட்டது.
எனக்கு வேண்டியவர்கள் ஒரே மாதத்தில் என் தமிழ், இந்தி படங்கள் ரிலீஸ் ஆவதைp பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் வேலைகளைக் கவனிப்பது நல்லதல்ல என்கிறார்.


Click it and Unblock the Notifications











