»   »  விஷால் யாரை திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா?

விஷால் யாரை திருமணம் செய்யப் போகிறார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷால் லட்சுமிகரமான பெண்ணை திருமணம் செய்யப் போகிறாராம்.

விஷாலுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனால் இன்னும் சிங்கிளாகவே உள்ளார். அவரை பார்ப்பவர்கள் அனைவரும் எப்பொழுது திருமணம் என்று கேட்கிறார்கள்.

இந்நிலையில் துப்பறிவாளன் பட விழாவில் பேசிய விஷால் கூறியதாவது,

துப்பறிவாளன்

துப்பறிவாளன்

துப்பறிவாளன் படம் பாண்டியநாடை விட தரமாக இருக்கும். ஒரு நடிகனாக, தயாரிப்பாளராக எனக்கு இந்த படம் மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.

மிஷ்கின்

மிஷ்கின்

மிஷ்கின் சாருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று 8 ஆண்டுகளாக நினைத்தேன். பல முறை அது கைகூடி கைவிட்டுப் போனது. இந்த இரண்டு சைக்கோக்களும் சேர்ந்து எப்படி படம் எடுக்கப் போகிறார்கள் என்று பேசினார்கள்.

பொக்கிஷம்

பொக்கிஷம்

மிஷ்கின் சைக்கோவும், விஷால் சைக்கோவும் சேர்ந்து படம் பண்ண முடியாது. கண்டிப்பாக சண்டை வரும் என்றார்கள். ஆனால் மிஷ்கின் என் வாழ்வின் பொக்கிஷமாக கிடைத்துள்ளார்.

சண்டை

சண்டை

என்னை வேறு ஒரு கோணத்தில் காட்ட வேண்டும் என்று இரவு, பகலாக யோசித்து டிசைன் செய்துள்ளார். முக்கியமாக சண்டைக் காட்சிகள். என் கெரியர் பெஸ்ட் சண்டைக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறும்.

திருட்டு டிவிடி

திருட்டு டிவிடி

நீங்க யார் என்று தெரியும், எங்கே இருக்கிறீர்கள் என்று தெரியும். இரண்டு வாரங்களில் உங்களை உலகிற்கு அடையாளம் காட்டுவேன். இது பைரசி பற்றி கூறுகிறேன்.

திருமணம்

திருமணம்

காமராஜர் மாதிரி இருக்கச் சொன்னாங்க. கண்டிப்பாக நேர்மையாக இருப்பேன். ஆனால் எனக்கு கல்யாணம் ஆக வேண்டும். இல்லை என்றால் லட்சுமிகரமான அவங்க கோச்சுக்குவாங்க என்றார் விஷால்.

English summary
Vishal is ready to ditch bachelorhood. Looks like the bride is waiting for him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil