கங்கனா சிஎம்.. அர்ணாப் பிஎம்.. சிவசேனா இருக்காது.. இஷ்டத்துக்கு பேசி வாங்கிக்கட்டும் இயக்குநர்!
மும்பை: மகாராஷ்டிராவில் நடக்கும் கூத்துக்களை எல்லாம் பார்க்கும் போது கங்கனா ரனாவத் அடுத்த முதல்வராகிடுவார் என பாலிவுட் நடிகர்களை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை கங்கனா ரனாவத்துக்கும் அம்மாநில ஆளும் கட்சியான சிவ சேனாவுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார் நடிகை கங்கனா ரனாவத்.

கட்டடம் இடிப்பு
இதனால் சிவ சேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத்துக்கும் கங்கனா ரனாவத்துக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலக கட்டடம் சட்ட விரோதமாக இடிக்கப்பட்டது.

சாடும் கங்கனா
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தனது அலுவலகம் கட்டப்பட்டதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என கங்கனா டிவிட்டரில் சாடி வருகிறார்.

சர்ச்சை இயக்குநர்
மேலும் கங்கனாவின் அலுவகம் இடிக்கப்பட்ட சம்பவம் அம்மாநில அரசின் பழிவாங்கும் செயல் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா, இந்த விவகாரம் குறித்து டிவிட்டியுள்ளார்.

ஓட வேண்டியதுதான்
அவர் பதிவிட்டிருப்பதாவது, போறப் போக்கை பார்த்தால் கங்கனா ரனாவத் நிச்சயம் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆகிவிடுவார் போல.. அப்படி நடக்கும் போது பாலிவுட்டியன்ஸ் எல்லாம் டிம்புக்துக்குதான் செல்ல வேண்டும் என நக்கலடித்துள்ளார்.

அர்ணாப் பிரதமர்..
மற்றொரு டிவிட்டில் கங்கனா முதல்வராகும் போது, அர்ணாப் கோஸ்வாமி பிரதமர் ஆகிவிடுவார். சிவசேனா காணாமல் போய்விடும், மும்பை போலீஸ் ரிப்பளிக் டிவியால் ரீப்ளேஸ் செய்யப்படும். காங்கிரஸ் இத்தாலிக்கு எஸ்கேப் ஆகிவிடும்.. கடவுளே.. என கேலியும் கிண்டலுமாய் கூயுள்ளார்.

கொரோனாவுடன்..
தொடர்ந்து மற்றொரு டிவிட்டிலும் கங்கனா ரனாவத்தையும் சிவசேனா கட்சியையும் கொரோனாவுடன் தொடர்பு படுத்தி டிவிட்டியுள்ளார். அதாவது, கொரோனா பாதிக்கப்பட்ட இந்தியாவுக்கும் தடுப்பூசி இல்லை அதேபோல் கங்கனாவால் பாதிக்கப்பட்ட சிவ சேனாவுக்கும் தடுப்பூசி இல்லை என டிவிட்டியுள்ளார்.

ஏன் உளறல்?
ராம் கோபால் வர்மாவின் இந்த டிவிட்டுகளை பார்த்த நெட்டிசன்கள், டோலிவுட்டில் இருந்து ராம்கோபால் வர்மாவை விரட்டவும் தடுப்பூசி இல்லை என சாடியிருக்கின்றனர். சிலர் உங்களுக்கு என்ன ஆனது ஏன் இப்படி உளறிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











