twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லூசு பெண்ணே டு சிங்கப்பெண்ணே.. சினிமாவில் சாதிக்கும் பெண்கள்.. மகளிர் தின ஸ்பெஷல்!

    |

    சென்னை: ஹீரோக்கள் ரொமான்ஸ் செய்ய மட்டுமே ஹீரோயின்கள் தேவைப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலும், பல தமிழ் சினிமாக்களில், நடிகைகளை லூசு ஹீரோயின்களாகவே சித்தரித்து வந்தனர்.

    ஆனால், சமீப காலமாக, அந்த சித்தரிப்பை சில நடிகைகள் தூள் தூளாக நொறுக்கி, சிங்கப் பெண்களாக வலம் வருகின்றனர்.

    தனி ஒருத்தியாக சினிமாவை தாங்கி நகர்த்தி சென்று, பிளாக்பஸ்டர் கொடுக்க முடியும் என சாதித்து காட்டியுள்ள ஹீரோயின்கள் பற்றிய சிறு தொகுப்பை மகளிர் தின ஸ்பெஷலாக பார்ப்போம்..

     பிகிலில் மிஸ் ஆன விஷயம்.. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடக்கிறது.. எடுத்து வைங்கடா அந்த மைக்க! பிகிலில் மிஸ் ஆன விஷயம்.. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் நடக்கிறது.. எடுத்து வைங்கடா அந்த மைக்க!

    அருந்ததி

    அருந்ததி

    மாதவனின் ரெண்டு படத்தின் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நடிகை அனுஷ்கா, அருந்ததி படத்தின் மூலம், ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து, ஹீரோக்கு நிகராக ஷீரோவாக பெண்களால் ஜெயிக்க முடியும் என்று காட்டினார்.

    அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என பல படங்களில் லீடு கதாபாத்திரத்தில் நடித்த அனுஷ்கா நடிப்பில், அடுத்த படமான சைலன்ஸ் படமும் ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    நயன்தாரா

    நயன்தாரா

    சிம்பு பாடிய லூசுப்பெண்ணாக ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாரா, சிங்கப்பெண்ணாக மாறியுள்ளார். மாயா, டோரா, அறம், ஐரா, கோலமாவு கோகிலா என தொடர்ந்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக மாறியுள்ள நயன்தாரா, அடுத்ததாக மூக்குத்தி அம்மனாக சக்தி அவதாரம் எடுத்துள்ளார்.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ என ஹீரோக்கள் துரத்தி துரத்தி லவ் பண்ணும் அழகு ஏஞ்சலாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ், தெலுங்கிலும், தமிழிலும் உருவாகி வெளியான அந்த காலத்து சிங்கப்பெண் நடிகை சாவித்ரி தேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான நடிகையர் திலகம் படத்தில் நடித்து, நான் லூசு ஹீரோயின் இல்லை எனக்கும் நல்லா நடிக்க தெரியும் என தேசிய விருது வென்று காட்டி பெண்குயின், மிஸ் இந்தியா என தொடர்ந்து தன் வழியில் பயணித்து வருகிறார்.

    சமந்தா

    சமந்தா

    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும், நடத்தி அசத்தி வரும் நடிகை சமந்தாவும், ஹீரோ துணையின்றி, தன் நடிப்பை முன்னிலைப் படுத்தி, பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். யு டர்ன், ஓ பேபி, சூப்பர் டீலக்ஸ் என சமந்தாவும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

    தமன்னா, காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, வரலக்‌ஷ்மி சரத்குமார் என பல முன்னணி நடிகைகளும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளில் நடிக்க தொடங்கி உள்ளனர்.

    டாப்ஸி

    டாப்ஸி

    ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்திய பெண்ணாக அதிகம் பேசாத அப்பாவி கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான டாப்ஸி, பாலிவுட்டில் தற்போது, பிங்க், பாட்லா, மிஷன் மங்கள், சாந்த் கி ஆங்க், கேம் ஓவர், தப்பட், சபாஷ் மித்து, ஹசீன் தில்ருபா என பல நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ரோல்களில் நடித்து முன்னணி பாலிவுட் நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் சவால் விட்டு வருகிறார்.

    இயக்கத்திலும்

    இயக்கத்திலும்

    தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மட்டுமல்ல, இயக்குநர்களாகவும் சமீப காலத்தில் பல பெண்கள் அதிரடி காட்டி வருகின்றனர். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களுக்கே சவால் விட்டு கடும் போட்டியாக மாறி உள்ளார் சுதா கொங்கரா. ஹலீதா ஷமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி படத்தை பார்த்த பல ஆண் இயக்குநர்கள், காதலை தாங்கள் கூட இப்படி சொல்ல வில்லையே என வெட்கி தலை குனிகின்றனர்.

    தேசிய விருது பெற்ற பாரம் படத்தை இயக்கிய பிரியா கிருஷ்ணஸ்வாமியும் தமிழ் சினிமாவில் சிங்க பெண்ணாகத் தான் திகழ்கிறார். இந்த ஆண், பெண் பேதம் எல்லாம் விரைவிலே மறைந்துவிடும், பெண்களின் எழுச்சி அதனை விரைவிலேயே உருவாக்கும்.

    English summary
    Nayanthara, Anushka, Keerthy Suresh, Samantha, Tamannah, Tapsee, Kajal Aggarwal, Varalakshmi Sarathkumar and much more heroines turned as Shero nowadays.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X