twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்ஜிஆர் என்னும் பூவினால் நான் மணக்கிறேன் - கோவில் கட்டிய ரசிகர் கலைவாணன்

    |

    Recommended Video

    MGR Temple | எம்.ஜி.ஆருக்கு கோவில் கட்டிய அவருடைய ரசிகர்- வீடியோ

    சென்னை: இறைவன் எம்ஜிஆர் என்னும் பூவின் மூலம் நான் புகழடைந்துள்ளேன் என்று எம்ஜிஆருக்கு கோவில் கட்டியுள்ள அவரது ரசிகர்க கூறியுள்ளார்.
    திருவள்ளூர் மாவட்டம் நத்தமேடு என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டுள்ளது. கலைவாணன் என்பவர் இந்த கோவிலை கட்டி உள்ளார்.

    Lord MGR bridges political divide in Tiruvallur temple

    எம்.ஜி.ஆரின் ரசிகராகவும், அவரது பக்தராகவும் இருக்கும் கலைவாணனின் மனைவி சாந்தியின் கனவில் எம்.ஜி.ஆர் மிகவும் கவலையுடன் அவர்களது இல்லத்துக்கு நடந்து வந்ததாகவும் அவர் கொடுத்த ஐடியாபடியே இந்த கோவிலைக் கட்டியுள்ளார்.

    கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 10க்கு 10 அறையில்தான் கட்ட வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. எல்லாம் இறைவன் எம்ஜிஆர் அருள்தான் என்று கூறியுள்ளார்.

    1977ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதன் முதலாக பார்த்ததாக கூறும் கலைவாணன் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார். தர்மத்தின் வழியில் நடந்த அவர்தான் தனது இறைவன் என்கிறார். இறைவன் எம்ஜிஆர் என்கிற பூவின் மூலம் இந்த கலைவாணன் மணக்கிறான். சாதாரண பேப்பர் போடும் நபரான தனக்கு எம்ஜிஆர் மூலம்தான் பணம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர் கோவில் கட்டுவதற்காக இந்த இடத்தை வாங்கியிருக்கிறார்.

    மவுண்ட்ரோட்டில் பேப்பர் போடும் தொழில் செய்து வந்த தனக்கு எல்லாமே எம்ஜிஆர்தான் என்று கூறுகிறார். அவருக்கு உதவி செய்பவர் அவரது மகள் சங்கீதா.

    ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் தனது வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்ததாகவும் இப்போது எனது ஒரே கடவுள் இறைவன் எம்.ஜி.ஆர்.தான் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லி நெகிழ்கிறார் கலைவாணன். இந்த கோவிலுக்கு மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் அவரது தீவிர பக்தர்கள் வந்து செல்கிறார்கள். ஆண்டு தோறும் ஆகஸ்டு 15ம்தேதி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எம்.ஜி.ஆரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

    வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்' என்ற வரிகளுக்கு ஏற்ப நடிகராக இருந்து தலைவராக உயர்ந்த எம்.ஜி.ஆர். இன்றைக்கு கடவுளாக கொண்டாடப்படுகிறார். அவர் உயிருடன் இருக்கும் போதே எத்தனையோ கர்ப்பிணிப் பெண்கள் எம்.ஜி.ஆரை காண தவம் இருப்பார்களாம். காரணம், எம்.ஜி.ஆரைப் போல குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காகத்தானாம். இன்றைக்கும் குழந்தை வரம் வேண்டி எம்.ஜி.ஆர் கோவிலுக்கு இருமுடி கட்டி படையெடுக்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டி தம்பதிகள் சிலர் வருவதாகவும், சிலருக்கு அற்புதங்கள் நிகழ்ந்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    English summary
    Arulmigu MGR Aalayam at Nathamedu in Tiruvallur district, MGR, the actor-politician of yesteryear who is the deity at the temple, has been attracting leaders and workers from across the political spectrum, besides regular devotees.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X