வாய்ப்பு போனால் போகுது, படுக்கைக்கு போகாதீங்க: தனுஷ் தோழியின் அறிவுரை
மும்பை: பட வாய்ப்பு போனால் போகட்டும், படுக்கைக்கு செல்லாதீர்கள் என்று நடிகைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் ஸ்வரா பாஸ்கர்.
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பாலிவுட்டில் உள்ளது என்று நடிகைகள் ஒவ்வொருவராக கூறி வருகின்றனர். ஹாலிவுட்டில் இருக்கும் காமக்கொடூர தயாரிப்பாளர் வெயின்ஸ்டீன் போன்று பாலிவுட்டிலும் உள்ளதாக நடிகைகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் கூறியிருப்பதாவது,

தொல்லை
நான் நடிக்க வந்த புதிதில் அவுட்டோர் ஷூட்டிங்கின்போது இயக்குனர் ஒருவர் தொல்லை கொடுத்தார். இரவும், பகலும் என்னை பின்தொடர்ந்தார். காட்சி பற்றி பேச வேண்டும் என்று ஹோட்டல் அறைக்கு அழைத்தார். அங்கு சென்றால் அவர் குடிபோதையில் இருந்தார்.

பேச்சு
படப்பிடிப்பு துவங்கிய ஒரு வாரத்திலேயே அவர் காதல், செக்ஸ் மற்றும் ஒரு நாள் இரவு மட்டும் சேர்ந்திருப்பது பற்றி என்னிடம் பேசத் துவங்கினார். ஒரு நாள் இரவு குடித்துவிட்டு என் அறைக்கு வந்து கட்டிப்பிடிக்குமாறு தொல்லை கொடுத்தார்.

தனிமை
அந்த இயக்குனருக்கு பயந்து நான் பேக்கப் செய்ததும் என் அறையில் உள்ள விளக்குகளை ஆஃப் செய்துவிட்டு இருட்டிலேயே மேக்கப்பை துடைப்பேன். விளக்கு எரிந்தால் அவர் வந்துவிடுவாரோ என்ற பயம் தான்.

மீண்டும்
படத்தின் எக்சிகியூட்டிவ் ப்ரொடியூசரிடம் புகார் தெரிவித்தேன். அதன் பிறகு இரண்டு வாரம் அந்த இயக்குனரின் தொல்லை இல்லாமல் இருந்தது. பின்னர் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.

அறிவுரை
பட வாய்ப்பு போனால் போகட்டும், படுக்கைக்கு செல்ல வேண்டாம் என்பதே என் அறிவுரை என ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார். ஸ்வரா தற்போது வீர் தி வெட்டிங் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் நடித்த முதல் பாலிவுட் படத்தில் அவரின் தோழியாக நடித்தவர் ஸ்வரா. தற்போது தலைப்பை மறுபடியும் படிக்கவும்.


Click it and Unblock the Notifications











