காதலில் தோல்வி அடைவது பழக்கமாகிவிட்டது.. பீட்டர் பாலை பிரிந்தது பற்றி நடிகை வனிதா உருக்கம்!
சென்னை: காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகி விட்டது என்று நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
முறையாக விவாகரத்து செய்யாமல் அவர் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் தெரிவித்திருந்தார்.

வனிதாவுக்கு எதிராக
பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபம் எடுத்தது. வனிதாவுக்கு எதிராகவும் எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சூரியாதேவி என்பவரும் நடிகை கஸ்தூரி, நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோரும் வனிதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

காரசாரமான சண்டை
பீட்டர் பால் மோசமானவர் என்றும் அவர் சுயரூபம் விரைவில் தெரியும் என்று அவர் மனைவி ஹெலனும் கூறியிருந்தார். இந்நிலையில், சந்தோஷமாக சென்றுகொண்டிருந்த பீட்டர்பால், வனிதா விஜயகுமார் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டது. இருவரும் கோவா சென்றிருந்த நேரத்தில் காரசாரமான சண்டை நடந்ததாகக் கூறப்பட்டது.

வீட்டை விட்டு
இதையடுத்து பீட்டர்பாலை, வனிதா வீட்டை விட்டு துரத்தியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகை விஜயகுமார் சமூக வலைதளத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் பல விஷயங்களை எதிர்கொண்ட தைரியமான பெண் நான்.

அதிசயங்கள் மீது
இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறேன். தயவு செய்து வேறு எதையும் யூகிக்க வேண்டாம். அன்பால் மட்டுமே என்னை தாக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. அப்படி அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன். எனக்கு விதிக்கப்பட்டு இருப்பதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

நொறுங்கும் நிலை
நான் ஒரு போதும் எந்த தவறும் செய்யவில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை கொடுத்தேன். என் கனவுகளும் நம்பிக்கைகளும் நொறுங்கும் நிலையில் இப்போது இருக்கிறேன். காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கமாகிவிட்ட ஒன்று.

பறிபோகும் வாழ்க்கை
ஆனால், அதில் இருந்து மீண்டு வந்து தைரியமாக இருப்பேன். காதலை நம்பி ஏமாறுவது வேதனையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கிறது. உங்கள் கண்களின் முன்னால் வாழ்க்கை பறிபோய் கொண்டிருப்பது மிகவும் வேதனையானது. இவ்வாறு கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











