ஹர்பஜனுடன் பிரண்ட்ஷிப் படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா
Recommended Video
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் லாஸ்லியா.
ஷேண்டோ ஸ்டுடியோஸ் & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் "பிரண்ட்ஷிப் "படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .


மேலும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையிலே தற்போது வெளியாகி இருக்கும் தகவல் இருக்கிறது .லாஸ்லியா பிக்பாஸ் வீட்டின் இறுதி நாள் வரை இருந்து சாதனை புரிந்தவர் .பிக்பாஸ் ஆரம்பித்த முதல் மூன்று வாரங்கள் யார் என்று தெரியாமல் இருந்த லாஸ்லியா சுதாரித்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்தி முன்னேறினார் .
தனது திறமைகளை சரியாக பயன்படுத்தி பிக்பாஸ் சீசன் 3ல் இறுதி வரை பயனித்தார் .லாஸ்லியா மற்ற பிக்பாஸ் விருந்தாளிகளை போல இல்லாமல் சரியான புரிதளுடன் விளையாடி பிக்பாஸில் சிறந்த பெயர் எடுத்தார் .கவினுக்கும் லாஸ்லியாவிற்கும் உள்ளே ஏற்பட்ட காதல் காட்சிகள் இருவரும் ஒருவொருத்தரை விட்டுகொடுக்காத தன்மை என லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் பயனித்த அத்தனை விசயத்திற்கும் ரசிகர்கள் ஏராளம்.

பிக்பாஸ் முடிந்து தற்போது அதில் பங்கேற்ற ஒவ்வொரு பிரபலத்திற்கும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வரும் நிலையில் லாஸ்லியாவுக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்திருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது .இதனால் லாஸ்லியா தற்போது புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார் என்று கூட சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











