தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா.. தீயாய் பரவும் தகவல்.. ஹேப்பி மோடில் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியாவும் தர்ஷனும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன். இலங்கை தமிழர்களான இவர்கள் அண்ணன் தங்கைகளாக பிக்பாஸ் வீட்டில் வலம் வந்தனர்.
தர்ஷன் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார் தர்ஷன்.

பெரிய புராஜெக்ட்
இதனை தொடர்ந்து நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றார். அதன்பிறகு தான் ஒரு பெரிய புராஜெக்ட்டில் ஒப்பந்தம் ஆகியிருப்பதாக அறிவித்தார் தர்ஷன்.

சனமை பிரிந்த தர்ஷன்
ஆனால் தர்ஷன் இதுவரை எந்த படத்திலும் நடிப்பதாக தெரியவில்லை. மாறாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரபல மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டியை காதலித்தார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவரை பிரிந்தார் தர்ஷன்.

தர்ஷன் மீது புகார்
இதனால் நொந்துபோன சனம் ஷெட்டி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தர்ஷன் ஏமாற்றிவிட்டார் என கமிஷனர் அலவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா
இந்நிலையில் தர்ஷனும் லாஸ்லியாவும் படம் ஒன்றில் கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மலையாளத்தில் பெரும் ஹிட்டான படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் தர்ஷனுக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லாஸ்லியா தந்தை மரணம்
கடந்த நவம்பர் மாதம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் மாரடைப்பால் காலமானார். கனடாவில் காலமான அவரது உடல் சுமார் ஒரு மாதம் கழித்தே சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.

ரசிகர்கள் மகிழ்ச்சி
இதனால் லாஸ்லியாவின் குடும்பமே பெரும் சோகத்தில் இருந்தது. இந்நிலையில் லாஸ்லியா மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











