வாவ்.. லாஸ்லியா, தர்ஷன் படத்துக்கு பூஜை போட்டாச்சு.. டைட்டிலே வித்தியாசமா இருக்கே.. ரசிகர்கள் குஷி!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசனின் போட்டியாளர்களான தர்ஷன் மற்றும் லாஸ்லியா நடிப்பில் உருவாக உள்ள புதுப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.
இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு "கூகுள் குட்டப்பன்" என வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர்.
தர்ஷன், லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு, பார்த்திபன், இயக்குநர் விக்ரமன் என பலரும் பட பூஜையில் கலந்து கொண்டனர்.

கோலிவுட் குயின்
கோலிவுட்டின் இளம் குயினாக கலக்குகிறார் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா. லாஸ்லியா நடிப்பில் இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையில், இதுவரை 4 படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா. மேலும், பல புதிய படங்களும் லாஸ்லியாவின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கின்றன.

ஹீரோவாகும் தர்ஷன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் டைட்டில் வின்னர் ஆவார் தர்ஷன் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முகேன் ராவ் டைட்டில் வின்னர் ஆனார். தனது தயாரிப்பில் தர்ஷன் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பார் என கமல் அப்போதே அறிவித்தார். ஆனால், அந்த படம் இன்னமும் தொடங்கவில்லை இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாகிறார் தர்ஷன்.

வேற ஜோடி
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் ரொமான்ஸ் செய்த கவின் மற்றும் லாஸ்லியா இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா? என ரசிகர்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில், தற்போது தர்ஷன் மற்றும் லாஸ்லியா இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக போடப்பட்டுள்ளது.

கூகுள் குட்டப்பன்
கே.எஸ். ரவிக்குமாரிடம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய சபரி மற்றும் சரவணன் இணைந்து இந்த படத்தை இயக்க உள்ளனர். இந்த படத்திற்கு "கூகுள் குட்டப்பன்" என வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. லாஸ்லியா, தர்ஷன் இணைந்து நடிக்கும் பட அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

மலையாள ரீமேக்
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பன். இயக்குநர் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் இயக்கிய இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் இந்த படத்தை உருவாக்க உள்ளனர்.

ஷூட்டிங் எப்போ
இயக்குநர் விக்ரமன், பார்த்திபன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், லாஸ்லியா, தர்ஷன் உள்ளிட்டோர் பங்குபெற்ற பட பூஜை விழா இன்று நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் பிப்ரவரி 12ம் தேதி தென்காசியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











