தர்ஷன் உடன் செம ரொமான்ஸ் போல.. ஜோடி போட்டு சுற்றும் லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: பிக் பாஸ் தர்ஷன் உடன் லாஸ்லியா சேர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பன் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குட்டப்பன் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ள நிலையில், இருவரும் இணைந்து இருக்கும் ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

செய்தி வாசிப்பாளர்

செய்தி வாசிப்பாளர்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா மரியநேசன் பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். லாஸ்லியாவின் அழகு மற்றும் வெள்ளந்தியான சிரிப்பில் மயங்கிய ரசிகர்கள் அவருக்கென தனி ஆர்மியையே உருவாக்கி விட்டனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் அனிதா சம்பத்தும் செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் கதவு

கோலிவுட் கதவு

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி லாஸ்லியாவை மறுபடியும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்கிற முடிவோடு கோலிவுட் கதவு அவருக்கென தாராளமாக திறந்துள்ளது. ஹர்பஜன் சிங் உடன் பிரெண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், தர்ஷன் உடன் ஒரு படம் மற்றும் இன்னும் சில படங்களிலும் கமீட் ஆகி உள்ளார்.

விரைவில் வெள்ளித்திரை

விரைவில் வெள்ளித்திரை

சமீபத்தில் லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இருவரும் கோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள பிரெண்ட்ஷிப் படத்தின் அட்டகாசமான டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. சந்தன கலர் சேலை, பிங்க் கலர் ஜாக்கெட் அணிந்து கொண்டு, கூலர்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு செம கலக்கலாக லாஸ்லியா நடந்து வரும் வீடியோவை பலரும் கட் பண்ணி ஷேர் செய்து வருகின்றனர்.

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில்

கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில்

பிரெண்ட்ஷிப் படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர்கள் இயக்கத்தில் லாஸ்லியா, தர்ஷன் நடிப்பில் கூகுள் குட்டப்பன் உருவாகி வருகிறது. மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம்.

Recommended Video

பாவாடை தாவணியில் பட்டைக்கிளப்பும் Losliya | Friendship
தர்ஷன் உடன்

தர்ஷன் உடன்

நடிகை லாஸ்லியா மற்றும் தர்ஷன் இந்த படத்தின் ஷூட்டிங்கில் தான் தற்போது பிசியாகி உள்ளனர். பிக் பாஸ் பிரபலமான தர்ஷன் உடன் லாஸ்லியா நெருக்கமாக நின்று செம ரொமான்டிக்காக எடுத்த ஏகப்பட்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி லாஸ்லியா மற்றும் தர்ஷன் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

அண்ணன் தங்கை

பிக் பாஸ் வீட்டில் அண்ணன் தங்கை உறவில் இருந்த இவர்கள், கூகுள் குட்டப்பன் படத்துக்காக ஜோடி போட்டு சுற்றி வருகின்றனர். இந்த ஜோடி சூப்பரா இருக்கேப்பா என்றும், லியா பேபி செம அழகு என்றும் லாஸ்லியா ஆர்மியினர் அந்த போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X