கவின் குறித்து கேட்டு நச்சரித்த ஃபேன்ஸ்.. இன்ஸ்டாவில் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்த லாஸ்லியா!

சென்னை: இன்ஸ்டாகிராமில் கவின் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமா வாய்ப்புகளும் குவியத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே மூன்று படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள லாஸ்லியா, தற்போது கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷனுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

வைரலான போட்டோஸ்

வைரலான போட்டோஸ்

இதற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று, அதன் போட்டோக்கள் வைரலானது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள லாஸ்லியா, அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கவினுடன் இணைந்து

கவினுடன் இணைந்து

அவரது தந்தை மறைவுக்கு பிறகு பெருமளவு எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துடன் உள்ளார் லாஸ்லியா. சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் பங்கேற்ற லாஸ்லியா, கவினுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

பெற்றோர் எதிர்ப்பு

பெற்றோர் எதிர்ப்பு

அந்த போட்டோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவினும் லாஸ்லியாவும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் லாஸ்லியாவின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திடீரென கவினுடன்..

திடீரென கவினுடன்..

இதனால் பிக்பாஸுக்கு பிறகு கவினுடன் பெரிதாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை லாஸ்லியா. மேலும் பொது நிகழ்ச்சிகளிலும் கவினுடன் பேசுவதை தவிர்த்து வந்தார் லாஸ்லியா. திடீரென கவினுடன் சேர்ந்து போட்டோ எடுத்தது அவர்களின் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

இருவரும் காதலிக்கிறீர்களா?

இருவரும் காதலிக்கிறீர்களா?

அப்போது முதல் லாஸ்லியா என்ன போட்டோ ஷேர் செய்தாலும் கவின் குறித்தே விசாரித்து வந்தனர் ரசிகர்கள். லாஸ்லியாவை அண்ணி என்று குறிப்பிட்டு கவின் அண்ணனுடன் எப்போது திருமணம்? இருவரும் காதலிக்கிறீர்களா என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.

கமெண்ட் ஆப்ஷன்

கமெண்ட் ஆப்ஷன்

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் லாஸ்லியா. ஆனால் ரசிகர்கள் தன்னை கேள்வி கேட்காதப்படி கமெண்ட் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார். இருந்த போதும் ரசிகர்கள் டிவிட்டரில் லாஸ்லியாவை கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X