ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் குளத்தில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் வீடியோ!
சென்னை: பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா தனது ஆண் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான கவினை காதலிக்க தொடங்கினார்.
இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினுடன் காதலில் மூழ்கியிருந்தார் லாஸ்லியா.

முகம் பார்க்கவில்லை
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும் சரி லாஸ்லியாவும் சரி தங்களின் காதல் குறித்து வாய்திறக்கவில்லை. பிக்பாஸை தொடர்ந்து விஜய் டிவி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஏறேடுத்து பார்க்காமல் இருந்தனர்.

அப்பாவுக்கு கட்டுப்பட்டு
இதனால் இருவருக்கும் இடையே பிரேக்கப் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியானது. அதேநேரத்தில் தனது அப்பாவின் நிபந்தனைக்கு கட்டுப்பட்டுதான் லாஸ்லியா பொதுவெளியில் கவினுடன் பேசுவதை தவிர்த்து வருவதாகவும் தகவல் எழுந்தது.

காதல் குறித்து அப்டேட்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள லாஸ்லியா, அவ்வப்போது தனது போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கவினுடனான காதல் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.

ஆண் நண்பர்களுடன் ஆட்டம்
ஆனால் எதற்கும் வாயே திறக்காமல் உள்ள லாஸ்லியா தன் வேலையை பார்த்து வருகின்றார். இந்நிலையில் லாஸ்லியா நீச்சல் குளத்தில் தனது ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
வேதனைபட மாட்டாரா?
அதனை பார்த்த நெட்டிசன்கள், கவினுக்கும் உங்களுக்குமான கதை என்ன ஆனது? எப்போது கல்யாணம்? இப்படி ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போடுகிறீர்களே கவின் வேதனை படமாட்டாரா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











