பிரேக்கப்லாம் இல்லீங்க.. லாஸ் லவ்வுக்கு ஓகே சொன்ன அப்பா.. ஆனா ஒரு கண்டிஷனாம்.. தோழி சொன்ன ரகசியம்!

Recommended Video

Bigg Boss Success Meet| Bigg Boss Reunion| Kavin Losliya

சென்னை: லாஸ்லியா- கவின் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வரும் என்றும் லாஸ்லியாவின் தோழி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியில் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிக்பாஸில் பங்கேற்றார்.

ஆனால் வந்த நோக்கத்தை விட்டுவிட்டு கவினை காதலிக்க தொடங்கினார். கவின் சாக்ஷியை காதலிக்கிறார் என்பதை அறிந்தும் கவினை காதலித்தார். லாஸ்லியாவின் காதலை புரிந்த கவின், சாக்ஷியை கழட்டிவிட்டுவிட்டு லாஸ்லியாவின் காதலை ஏற்றார்.

கடுமை காட்டினார்

கடுமை காட்டினார்

லாஸ்லியாவின் காதலுக்கு அவரது தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா மரிய நேசன், அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக நடந்து கொண்டார்.

கவினிடம் பேசிய லாஸ்

கவினிடம் பேசிய லாஸ்

பத்தாண்டுகளுக்கு பிறகு மகளை பார்த்த பிறகும், அவரது காதலால் பாராமுகமாக நடந்துகொண்டார் லாஸ்லியாவின் அப்பா. இதனை தொடர்ந்து காதலை முறித்துக்கொள்ளலாம் என்று கவினிடம் பேசினார் லாஸ்லியா.

கவினுடன் காதல்

கவினுடன் காதல்

ஆனால் அதன்பிறகும் கவினுடன் நெருங்கி பழகி வந்தார். கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்றபோது கதறி அழுத லாஸ்லியா, தன்னையும் வெளியேற்றும்படி பிக்பாஸிடம் கெஞ்சினார். இதனால் அவர் கவினை காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று உறுதியானது.

பேசவில்லை

பேசவில்லை

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கவினும் லாஸ்லியாவும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்கவில்லை. பிக்பாஸ் கொண்டாட்டம், பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி என சந்திக்க இருவருக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

லாஸ்லியா ஒரு பக்கம்

லாஸ்லியா ஒரு பக்கம்

சக்ஸஸ் பார்ட்டி மீட்டில் கூட கவின் தலையை தொங்கப்போட்டுக் கொண்டும் லாஸ்லியா ஒரு பக்கமும் நின்று கொண்டிருந்தனர். இதனால் இருவரின் காதலும் பிரேக்கப் ஆகிவிட்டதாக பேசப்பட்டது.

ஆனா ஒரு கண்டிஷன்

ஆனா ஒரு கண்டிஷன்

இந்நிலையில் லாஸ்- கவின் காதலுக்கு லாஸ்லியாவின் தந்தை ஓகே சொல்லிவிட்டதாகவும் ஆனால் அவர் ஒரு நிபந்தனையை விதித்திருப்பதாகவும் லாஸ்லியாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது ஓராண்டு கவினும், லாஸ்லியாவும் பேசாமல் பழகாமல் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறாராம்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்த நிபந்தனையை அவர்கள் சரியாக கடைபிடித்தால் காதலுக்கு சம்மதம் தெரிவிப்பதாக கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாகதான் இருவரும் பொது இடங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏதோ விஷயம் இருக்கிறது

ஏதோ விஷயம் இருக்கிறது

இதனைக்கேட்ட ரசிகர்கள், இருக்கலாம்.. காதல் பிரேக்கப் என்றால் எப்படி ஒரே கலரில் டிரெஸ் அணிவார்கள்? இப்படியா முகத்தை கூட பார்க்காமல் இருப்பார்கள்? பழகிய தோஷத்திற்காவது பார்த்ததும் நலம் விசாரித்து ஹாய் பை சொல்வார்களே.. ஏதோ விஷயம் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X