தர்ஷன் பெயரை சொல்ல மறந்த லாஸ்லியா!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த லாஸ்ஸியா இப்பொழுது படங்களில் கதாநாயகியாக கலக்கி கொண்டுள்ளார்.

ஃபிரண்ட்ஷிப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்ஸியா அதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்

இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கூகுள் குட்டப்பா பட விழாவில் பேசிய லாஸ்லியா தர்ஷன் பெயரை சொல்ல மறந்து விட்டு பின் பதறிப் போனார்.

பிக் பாஸ் குயினாக

பிக் பாஸ் குயினாக

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக இருந்த லாஸ்லியா தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். போட்டியாளராக களமிறங்கிய முதல் நாளே ரசிகர்களை தனது க்யூட்னஸ் மூலம் கவர்ந்த லாஸ்லியா அதன்பிறகு ஒட்டுமொத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் குயினாக மாறினார். செய்தி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் நடிப்பிலும் நடனத்திலும் மிகச் சிறந்து விளங்கும் லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி கோப்பையை பெறுவார் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இறுதி வாரத்திற்கு முன்பாகவே லாஸ்லியா வெளியேறினார்.பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு இவருக்கு படவாய்ப்புகளும் தற்போது குவிந்து வருகிறது அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக அறிமுகமான ஃபிரெண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான லாஸ்லியா அதை தொடர்ந்து ராட்சசன் பட தயாரிப்பாளர் இயக்கத்தில் புதிய படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

கூகுள் குட்டப்பா

கூகுள் குட்டப்பா

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கேஎஸ் ரவிக்குமார் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இந்த படத்தை இயக்கி வருகின்றனர். இதில் லாஸ்லியா மற்றும் தர்ஷன் லீட் ரோலில் ஜோடியாக நடித்துள்ளனர்

தர்ஷன் பெயரை சொல்லி

தர்ஷன் பெயரை சொல்லி

நேற்று கூகுள் குட்டப்பா ட்ரைலரை நடிகர் சிம்பு வெளியிட்டார். கூகுள் குட்டப்பா ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் கூகுள் குட்டப்பா பட விழாவில் பேசிய லாஸ்லியா அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டே வர திடீரென தர்ஷன் இருப்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார். பின் இறுதியாக தர்ஷனை மறந்துவிட்டேன், தர்ஷன் எனக்கு ஒரு நல்ல நண்பன் நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மிகவும் கன்ஃபர்டபுளாக உள்ளது என தர்ஷன் பெயரை சொல்லி திடீரென பதறிப் போய் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X