தமிழ் சினிமாவில் ஹீரோயினாகும் லாஸ்லியா.. தோழிசூசகப் பதிவு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

பிக் பாஸ் லாஸ்லியா நடிகையாக அறிமுகமாகப் போவதாக அவரது தோழி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பூடகமாக பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss Losliya Movie:படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கா?

சென்னை: லாஸ்லியா நடிகையாக அறிமுகமாவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 3வது இடத்தை வெற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் மன்றம் வைக்கும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார்.

கவினுடன் நெருக்கம், சேரப்பாவுடன் கோபம், வனிதாவுடன் சண்டை, காலை வார்மப் நடனம், பாய்ஸ் கேங்கின் ஒரே கேர்ள் என இந்த சீசனில் லாஸ்லியாவை பற்றி பேச ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருமுறை தொலைப்பேசி வழியாக பேசிய இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட லாஸ்லியாவை வரவேற்க தமிழ் சினிமா காத்திருப்பதாகக் கூறினார்.

கவினுடன் ராஜா ராணி

கவினுடன் ராஜா ராணி

எனவே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதுவும் கவினுக்கு ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

தோழி சொன்ன குட் நியூஸ்

தோழி சொன்ன குட் நியூஸ்

இந்நிலையில் லாஸ்லியாவின் தோழி தர்ஷி, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவரும் லாஸ்லியாவும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சில எமோடிகான்களை போட்டுள்ளார். அதில், ஒரு முட்டை உடைவது போலவும், ஒரு கை குறிப்பிடும் திசையில் ஸ்டார் ஒன்று இருப்பது போலவும் உள்ளது.

நெட்டிசன்கள் யூகம்

நெட்டிசன்கள் யூகம்

இதைப் பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதை தான் அவரது தோழி பூடகமாக தெரிவித்திருக்கிறார் என யூகித்துள்ளனர். அதாவது முட்டை உடைவதை பிரேக்கிங் நியூஸ் என்றும், ஸ்டார் எமோடிகான் லாஸ்லியா சினிமா நட்சத்திரமாகிவிட்டதை குறிப்பிடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்

இந்த செய்தி லாஸ்லியா ஆர்மிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் லாஸ்லியாவின் சினிமா பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அதுகுறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X