லாஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது!

சென்னை : லாஸ்லியா இப்பொழுது தமிழில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

நட்பு மற்றும் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படமாக உருவாகிவரும் பிரெண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கனவு கன்னியாக

கனவு கன்னியாக

பிக் பாஸுக்கு முன்புவரை தமிழ் மக்களால் அறியப்படாத நபராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ளார். செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது மனங்களையும் வென்ற இவர் இப்போது தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

முதல் முறையாக ஹீரோவாக

முதல் முறையாக ஹீரோவாக

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக ஹீரோவாக பிரண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் நடித்து தமிழில் அறிமுகம் ஆகிறார் . இதில் இவருக்கு ஜோடியாக நடிகை லாஸ்லியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இணைந்து இந்தப்படத்தை இயக்குகின்றனர்.

 முக்கிய வேடத்தில்

முக்கிய வேடத்தில்

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவுற்ற நிலையில் கடந்த மார்ச் 1ஆம் தேதி இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதில் காமெடி நடிகர் சதீஷ் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

Recommended Video

ENJOY ENJAAMI பாடலுக்கு பிரபலங்கள் ஆட்டம் | Losliya, AlyaManasa, Janani
கல்லூரி மாணவராக

கல்லூரி மாணவராக

ஹர்பஜன் சிங் இதில் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் இந்த படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நடிகர் சிம்புவும் இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். இப்படத்தை சம்மரில் வெளியிட முடிவு செய்திருந்த நிலையில் கொரானா நோய்த்தொற்று காரணமாக இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்க தற்போது பிரண்ட்ஷிப் படத்தின் மேக்கிங் வீடியோ இணையதளத்தில் வெளியாகி கலக்கிக்கொண்டு உள்ளது. மேலும் லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X