லாஸ்லியாவின் முதல் படம்.. பவுலர் ஹர்பஜனை மிஸ் பண்ண மாட்டீங்க.. பிரண்ட்ஷிப் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

சென்னை: பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் முதல் படமான பிரண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Friendship Motion Poster Hidden Details | Losliya Mariyanesan, Harbhajan Singh, Arjun Sarja

இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா நட்போடு இணைந்து இயக்கி இருக்கும் படம் பிரண்ட்ஷிப்.

இந்த படத்தில் ஹீரோவாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

முதல் படம்

முதல் படம்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் இலங்கை செய்திவாசிப்பாளர் பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியா ஆகிய இருவருக்கும் தமிழில் முதல் அறிமுக படம் பிரண்ட்ஷிப். கல்லூரி கதையை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

ஹர்பஜன் சிங், அர்ஜுன், லாஸ்லியா இருக்கும் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றும் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கல்லூரி பேக்ட்ராப்பில், முதலில் லாஸ்லியா, அடுத்து அர்ஜுன் இறுதியாக ஹர்பஜன் சிங் லுக் ரிவீல் செய்யப்பட்டு இருக்கிறது.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

நடிகை லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனது மட்டுமின்றி இரு படங்களில் நடித்தும் வருகின்றனர். சந்தானத்தின் டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங்கும், பிரண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியின் பெயிரிடாத படத்தில் லாஸ்லியாவும் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஓவியாவுக்கு குவிந்ததை போலவே லாஸ்லியாவுக்கும் தனியாக ஆர்மி உருவானது. இந்நிலையில், அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க உள்ள லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X