கைகளில் கவினை வைத்து ரசிக்கும் லாஸ்லியா.. தீயாய் பரவும் போட்டோ.. செம குஷியில் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: லாஸ்லியா கைகளில் கவினின் ஓவியத்தை வைத்து ரசித்து பார்க்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சக போட்டியாளரான கவினை காதலித்தார். இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

காரணம்
ஆனால் பிக்பாஸை விட்டு வெளியேறிய பிறகு இருவரும் தங்களின் காதல் குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இதனிடையே இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டது என்றும், லாஸ்லியாவின் அப்பா போட்ட கண்டிஷனால்தான் இந்த அமைதி என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

ரசிகர்கள் சோகம்
அதேநேரத்தில் மற்ற நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வரும் லாஸ்லியா கவின் குறித்து பேசாமல் இருந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ரசிகர்கள் மகிழ்ச்சி
கவினுடன் இருக்கும் போட்டோவை வெளியிடுங்கள், கவினை திருமணம் செய்து கொள்ளுங்கள், அவரை விட்டுவிடாதீர்கள் என அவர்களின் ஆர்மியினர் கெஞ்சாத குறையாக டிவிட்டி வந்தனர். இந்நிலையில் கவின்லியா ரசிகர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
அதாவது லாஸ்லியா கவினின் வரைந்த ஓவியம் ஒன்றை தனது கைகளில் வைத்து ரசித்து பார்க்கும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











