நான் லாஸ்லியாவிடம் பேசினேன்.. உடைந்து போயிருக்கிறார்.. கதறுகிறார்.. வனிதா அதிர்ச்சி தகவல்!

சென்னை: தான் இப்போதுதான் லாஸ்லியாவிடம் பேசியதாக வனிதா பதிவிட்டுள்ள டிவிட் அவரது ரசிகர்களை சற்று ஆறுதல்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. அதன் மூலம் பெரும் பிரபலமான லாஸ்லியா, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

லாஸ்லியா பிக்பாஸில் பங்கேற்றதன் மூலம் அவரது தந்தையான மரியநேசனும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார்.

கனடாவில் மரணம்

கனடாவில் மரணம்

கனடாவில் பணிபுரிந்து வரும் மரியநேசன், நேற்று திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. லாஸ்லியா தந்தையின் மறைவுக்கு ரசிகர்களும் பிக்பாஸ் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வனிதா டிவிட்

வனிதா டிவிட்

மரியநேசனின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களில் ஒருவரான வனிதா, லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மறைவு குறித்து டிவிட்டியுள்ளார்.

ரொம்ப வருத்தமாக உள்ளது

ரொம்ப வருத்தமாக உள்ளது

அவரது மறைவு கொடூரமானது என்றும் இதயத்தை நொறுக்கி விட்டது என்றும் கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், கொடூரமான செய்தியைக் கேட்டது வருத்தமாக இருக்கிறது... இதை அவர்கள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை...

உடலையாவது..

உடலையாவது..

குறிப்பாக அவர்தான் அந்த வீட்டில் முக்கியமாக வருமானம் ஈட்டுபவர். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். மிகவும் உடைந்து போய்விட்டேன்.. வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது.. பயமாக இருக்கிறது... இந்த நேரத்தில் அவர்கள் குறைந்தபட்சம் அவரது உடலையாவது மீண்டும் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.. என பதிவிட்டிருந்தார்.

அழுது கொண்டே இருக்கிறார்

அழுது கொண்டே இருக்கிறார்

வனிதாவின் மற்றொரு பதிவில், லாஸ்லியாவின் அனைத்து ரசிகர்களுக்கும், நான் லாஸ்லியாவுடன் சற்றுமுன் பேசினேன் என்றும் அவர் நொறுங்கி போயிருக்கிறார். அழுது கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் மன உறுதியுடன் இருப்பார், அவர் இலங்கைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

உடல் உடனே வரமுடியாது

உடல் உடனே வரமுடியாது

தூதரகம் மூலம் செல்ல விஜய் டிவி குழு அவருடன் இருந்து ஏற்பாடு செய்து வருகிறது. கோவிட் தொற்றுநோய் காரணமாக உடல் உடனடியாக ஸ்ரீலங்காவை அடைய முடியாது. லாஸ்லியாவுக்கு என் அன்பையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்கிறேன்.

ஏதாவது நடக்கும்..

ஏதாவது நடக்கும்..

அபிராமியுடனும் மற்ற சில ஹவுஸ்மெட்ஸுடனும் பேசினேன். பிக்பாஸ் 3 ஹவுஸ்மெட்ஸ் அவருடன் டச்சில் உள்ளனர். அவர் பயணத்துக்கான உதவிகளையும் ஆதரவையும் வழங்கியுள்ளோம். ஏதாவது நடக்கும் என்று நம்புகிறேன்... கடவுள் அவளுடன் இருப்பார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X