இடுப்புல என்ன லுங்கியா.. சைக்கிள் பக்கத்தில் ஒரு சைஸா போஸ் கொடுத்த லாஸ்லியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் டு சினிமா என தனது சிறகை விரித்துள்ள லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக் பாஸ் தமிழ் சீசன் 2 மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமானார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கோலிவுட்டில் வரிசையாக 4 படங்களில் நடித்து வருகிறார்.

லாஸ்லியா ஆர்மி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் வெள்ளந்தியான மனசை பார்த்த ரசிகர்கள் உடனடியாக நடிகை லாஸ்லியாவுக்கு ஆர்மி ஆரம்பித்து இன்றளவும் அவருக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்து வருகின்றனர். லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோக்களை இணையத்தில் டிரெண்ட் செய்தும் வருகின்றனர்.

கோலிவுட் இளவரசி
ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகி உள்ள பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சீக்கிரமே தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் லாஸ்லியா. அந்த படத்தில் நடித்து வந்த போதே, அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி செம பிசியாக நடித்து வருகிறார். கோலிவுட்டின் இளவரசியாகவும் மாறி உள்ளார் லாஸ்லியா.

தர்ஷன் உடன்
ஹர்பஜன் சிங்குடன் பிரண்ட்ஷிப், ஆரியுடன் ஒரு படம், ஆக்சல் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் என கமீட் ஆகி உள்ள லாஸ்லியா தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் தர்ஷன் நடிப்பில் உருவாகி வரும் கூகுள் குட்டப்பன் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சைக்கிள் பக்கத்தில்
இன்ஸ்டாகிராமில் டிசைன் டிசைனாக மற்ற நடிகைகளை போலவே லாஸ்லியாவும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக சைக்கிள் ஒன்றின் அருகே இருக்கும் விதமாக எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இடுப்புல என்ன லுங்கியா
ஃபேஷன் விரும்பியான லாஸ்லியா அணிந்துள்ள ஸ்கர்ட் லுங்கி டிசைனில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் இடுப்புல என்ன லுங்கி கட்டி இருக்கீங்களா என்று ஜாலியாக கலாய்த்தும் வருகின்றனர். லாஸ்லியாவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொள்ளும் ஃபேன்ஸ்
நெகட்டிவான சூழலிலும் பாசிட்டிவாக இருங்கள் என கேப்ஷன் கொடுத்து இந்த போஸ்ட்டை நடிகை லாஸ்லியா மரியநேசன் பதிவிட்டுள்ளார். ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் குறைந்த நேரத்திலேயே இதனை லைக் செய்து லாஸ்லியாவின் அழகை வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











