For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அய்யய்யோ.. செல்லக்குட்டி ஊருக்கு போயிடுச்சா.. சோகத்தில் மூழ்கிய ரசிகாஸ்!

    |
    Bigg Boss Kondattam : மேடையை தெறிக்க விடும் முகேன்,கவின் நடனம்

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா ஒரு வழியாக தனது சொந்த நாட்டுக்கு சென்றுவிட்டார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்தார்.

    தொடர்ந்து 100 நாட்களை கடந்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த லாஸ்லியா, நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். இயக்குநர் சேரனை, சேரப்பா சேரப்பா என்று அழைத்ததன் மூலம் மக்களிடையே வரவேற்பு கிடைத்தது.

    'வலிமை'யுடன் மோதல்.. இப்பவே 'தளபதி 64' டைட்டில் வெளியாகிறதா?'வலிமை'யுடன் மோதல்.. இப்பவே 'தளபதி 64' டைட்டில் வெளியாகிறதா?

    மக்களின் வெறுப்பு

    மக்களின் வெறுப்பு

    ஆனால் கவினை காதலிக்க தொடங்கிய பின், சேரனின் பாசத்தை சந்தேகப்பட்டார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கவினை காதலித்தார். இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார் லாஸ்லியா.

    இலங்கை சென்றுவிட்டார்

    இலங்கை சென்றுவிட்டார்

    பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக சென்னையிலேயே தங்கியிருந்தார் லாஸ்லியா. இந்நிலையில் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ஷுட்டிங் நிறைவடைந்த நிலையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றுவிட்டார் லாஸ்லியா.

    வீட்டிற்கு திரும்பிவிட்டேன்

    வீட்டிற்கு திரும்பிவிட்டேன்

    இது தொடர்பாக டிவிட்டியுள்ள லாஸ்லியா, கடைசியாக வீட்டிற்கு திரும்பி விட்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் தனது சகோதரியுடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டிருக்கிறார் லாஸ்லியா.

    மிஸ் யூ லாஸ்லியா

    இதனை பார்த்த அவரது ரசிகர்கள் ப்ளீஸ் சீக்கிரம் திரும்பி வந்துவிடுங்கள் லியா என்று பதிவிட்டுள்ளனர். மேலும் மிஸ்யூ என்றும் தங்களின் வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர்.

    கவின் மிஸ் பண்ணுவான்

    ஐ மிஸ் யூ சகோதரி, நிகழ்ச்சியை பார்த்த எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு. அப்போ கவின் சகோதரருக்கு எப்படி இருக்கும்? ரொம்ப மிஸ் பண்ணுவான் லியா என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

    லவ் யு லாஸ்

    ஏதோ நம்ம வீட்டு பொண்ணு வெளி நாடு போற மாதிரி கஷ்டமா இருக்கு.. லவ் யு லாஸ்.. சீக்கிரம் வந்துடுங்க என்று லாஸ்லியா ஆர்மி பதிவிட்டிருக்கிறது.

    English summary
    Losliya left from Chennai. She has gone to her Sri Lanka. She has shared a photo with her sister from her house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X