கோட் சூட்டில் ரணகளப்படுத்திய லாஸ்லியா.. வாவ் சூப்பர் என வாய்பிளந்த ரசிகர்கள்!
சென்னை : செய்தி வாசிப்பாளராக இருந்து இப்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் நடிகை லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுனுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பிரண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து பெயரிடப்படாத பல திரைப்படங்களில் அடுத்தடுத்து லாஸ்லியா நடித்து வருவதை தொடர்ந்து இவரின் ரசிகர்களின் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.
இந்நிலையில் சமீப காலமாகவே பல்வேறு லுக்கில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வரும் லாஸ்லியா இப்போது கோட் சூட்டில் மிரட்டலான லுக்கில் கோலிவுட்டை அதிர வைத்து ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார்.

கவீனுடன் காதலில்
பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல தைரியமான பொண்ணு என்று பெயரெடுத்த லாஸ்லியா பின் கவீனுடன் காதலில் விழுந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பலராலும் பங்கமாக கலாய்க்கப்பட்டு வந்த போதிலும் இவரை ரசிக்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவில்லை.

பிரண்ட்ஷிப்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது இதயங்களையும் வென்ற லாஸ்லியா திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் முதன்முறையாக திரைப்படங்களில் அறிமுகமாக இருக்கும் "பிரண்ட்ஷிப்" என்ற திரைப்படத்தில் லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ட்ரெண்டாகி வருகிறார்
பிரண்ட்ஷிப் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அரியுடன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத ஒரு திரைப்படத்திலும், மற்றும் பல திரைப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் இவரை திரையில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறார்.

காட்சி விருந்து
சமீபத்தில் சேலையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வைரலாகி வந்ததோடு இப்பொழுது செம ஸ்டைலிஷான லுக்கில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்சிவிருந்து அளித்துள்ளார்.
Recommended Video

ஏகபோகமாக வர்ணித்து
ஸ்டைலான கோட்சூட், ஸ்டன்னிங்கான லுக் என பார்க்கவே லாஸ்லியா வித்தியாசமாக ஹாலிவுட் ஹீரோயினி போல காட்சியளிக்கும் இந்த சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்திருந்த லாஸ்லியாவை ரசிகர்கள் ஏகபோகமாக வர்ணித்து வரும் நிலையில், இந்த அட்டகாசமான கோட் சூட் புகைப்படங்கள் கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











