பச்சை கவுனில் பளபளக்கும் லாஸ்லியா... குவியும் லைக்ஸ்!

சென்னை : பல்வேறு கிசுகிசுக்களுக்கு நடுவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகளவு ரசிக்கப்பட்ட போட்டியாளராக மகுடம் சூடியவர் நடிகை லாஸ்லியா.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகும் பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் லாஸ்லியா இப்பொழுது பச்சை கவுனில் பளபளக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் தத்தளிக்க வைத்துள்ளார்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

சின்னத்திரையில் இருந்து வந்து தற்பொழுது வெள்ளித்திரையில் ஜொலிக்க தயாராகிக் கொண்டிருக்கும் நடிகை லாஸ் லியா ஸ்ரீ லங்காவை விடவும் தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டிருக்க அடுத்தடுத்த படங்கள் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறது. அந்த வகையில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார்.

 வி ஆர் தி பாய்ஸ்

வி ஆர் தி பாய்ஸ்

கவின், தர்ஷன், முகின் ராவ், சாண்டி மாஸ்டர் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரும் இணைந்து செம கலக்கலாக விளையாடியது இன்று வரை அனைவருக்கும் பிடித்த பிக் பாஸ் சீசன்களிலேயே தனிச் சிறப்பை பெற்று இருக்கிறார்கள். குறிப்பாக இவர்கள் பாடும் வி ஆர் தி பாய்ஸ் பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

அறிமுகமாகிறார்

அறிமுகமாகிறார்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த கையோடு அடுத்தடுத்த படங்களில் கையெழுத்திட்டு வந்து லாஸ்லியா தற்பொழுது பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து அறிமுகமாகிறார் . ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கூகுள் குட்டப்பன்

கூகுள் குட்டப்பன்

அதைத்தொடர்ந்து தர்ஷன் ஹீரோவாக நடுக்கும் கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கும் லாஸ்லியா இதைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

பச்சை கவுன்

பச்சை கவுன்

இவ்வாறு இவர் நடித்து வரும் திரைப்படங்கள் மிக விரைவிலேயே ஒவ்வொன்றாக வெளியாக இருக்க தமிழ் சினிமாவில் முழு நேர கதாநாயகியாக வலம் வர உள்ள லாஸ்லியா ரசிகர்களுக்கு பிடிக்கிற மாதிரி கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளத்தை கலக்கி கொண்டுள்ளார். அந்த வகையில் இப்பொழுது பச்சை கலர் கவுன் அணிந்து பார்க்கவே சும்மா பளபளன்னு ஜொலிக்கும் தங்கப் பூ போல இருக்கும் இவரை ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X