சாரி.. எதுவும் நினைக்காதீங்க.. வெளியே வந்து எல்லாம் சொல்றேன்.. அப்பாவை பார்த்து மீண்டும் கதறிய லாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 103 : லொஸ்லியா தன் அப்பாவுடன் வீடியோ காலில் பேசினார்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் தனது அப்பாவை பார்த்து கதறி அழுதுள்ளார் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் கவினும் தர்ஷனும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து, மீண்டும் கவினிடம் காதலில் உருகினார் லாஸ்லியா.

லாஸ்லியா கவினை பார்த்த பார்வையும், அவரது கையை பிடித்து இழுத்ததையும் கவின் ஆர்மியினரும் லாஸ்லியா ஆர்மியினரும் வைரலாக்கினர். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

வீடியோ காலின் மூலம்

வீடியோ காலின் மூலம்

அதில் லாஸ்லியா தனது அப்பாவுடன் பேசுவது காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, லாஸ்லியா வீடியோ காலின் மூலம் தனது அப்பா மரிய நேசனிடம் பேசுகிறார்.

இப்படியே இரு

இப்படியே இரு

உணர்ச்மிகு தருணமாக உள்ளது அந்த காட்சி. வீடியோ வாயிலாக தனது அப்பாவிடம் பேசும் லாஸ்லியா, ஹலோ அப்பா.. என்கிறார். எப்படி இருக்கிறாய் என்று கேட்கும் அவரது அப்பா, சந்தோஷமாய் இரு.. இப்போது இருப்பது போலவே இரு என்று கூறுகிறார்.

வெளியே வந்து சொல்றேன்

வெளியே வந்து சொல்றேன்

தொடர்ந்து பேசும் லாஸ்லியா, அப்பா சாரி.. எதுவும் நினைக்காதீங்க.. வெளியே வந்து நான் எல்லாம் சொல்கிறேன். இப்போ அவ்ளோதான் சொல்வேன் என்று கூறுகிறார். தனது மகளை பார்த்து மரியநேசனும் அப்பாவை பார்த்து லாஸ்லியாவும் கண்ணீர் விடுகின்றனர். இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ.

மகள் மீது கோபம்

மகள் மீது கோபம்

ஏற்கனவே ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, அவரிடம் கடுமையான கோபத்தை காட்டினார். கவினை தனது மகள் காதலிப்பதை விரும்பாத லாஸ்லியாவின் அப்பா, மகளை கடுமையாக கண்டித்தார்.

கதறிய லாஸ்லியா

கதறிய லாஸ்லியா

ஆனாலும் அடங்காத லாஸ்லியா கவினை தொடர்ந்து காதலித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய போது கூட நானும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே செல்கிறேன் என்று கூறி கதறி அழுதார்.

நெட்டிசன்ஸ் கருத்து

நெட்டிசன்ஸ் கருத்து

இந்நிலையில் இன்றைய புரமோவை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவுடன் கவின் இல்லாமல் இருப்பதை லாஸ்லியாவின் அப்பா விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரும் காத்திருக்கார்

ஹாஹா.. பர்ஃபாமன்ஸ் ஹெவியா இருக்கே.. வெளியே வரனுமுன்னுதான் அவரும் வெயிட் பண்ணிட்டு இருக்காரு, இப்போ இருக்குற மாதிரியே கவின் இல்லாம இரு என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X