உன் இறக்கையை விரிக்கும் வரை.. லாஸ்லியாவின் புது பிக்ஸ் !
Recommended Video
சென்னை : லாஸ்லியா தனது சமூக வலைத்தளத்தில் புதிய போட்டோக்களை பதிவிட்டுள்ளார்
லாஸ்லியா தற்போது பச்சை நிற ஆடையில் அழகான போட்டோக்களை எடுத்து இருக்கிறார். விடியற்காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் கனகச்சிதமாக சிறந்த போட்டோக்களை எடுத்திருக்கிறார் லாஸ்லியா. இந்த போட்டோக்களை சில கருத்துகளுடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார் லாஸ்லியா.

இந்த போட்டோக்களை பதிவிடும் போது லாஸ்லியா உன் றெக்கையை விரிக்கும் வரை நீ எவ்வளவு தூரம் பறப்பாய் என்று தெரியாது என்று கூறியிருக்கிறார்.
எந்த ஒரு பின்புலமும் இன்றி தற்போது சினிமாவில் பெரிய அளவில் வெற்றியை பதிக்க போகும் லாஸ்லியா தனது வாழ்க்கையில் பல சோதனைகளை தாண்டி இந்த வெற்றியை பதிவு செய்து இருக்கிறார் என்பதனை குறிப்பிடும் விதமாக இவ்வாறு குறிப்பிட்டு கூறியிருக்கிலாம் என கருதப்படுகிறது.

லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது பல ரசிகர்கள் அவரின் நேர்மையையும் சின்ன சின்ன குறும்புத்தனங்களையும் பெரிதாக ரசித்தனர் அவ்வாறே தற்போது படங்களில் நடிக்க போகிறாரா அல்லது புதுமையான விசயங்களுடன் படத்தில் நடிக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதாக ஏற்பட்டுள்ளது .
லாஸ்லியா அடுத்ததாக பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜனுடன் நடித்து வருகிறார். இதன் பின் நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக்பாஸ் அபிராமி மற்றும் ஷ்ருஸ்டியும் முக்கிய வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது .


Click it and Unblock the Notifications











