ஒரே ஒரு ஹாய்.. ஒரு ரிப்ளை ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்ஸ்.. கண்டுகொள்ளாமல் கெத்துக்காட்டும் லாஸ்லியா!

Recommended Video

Bigg Boss Losliya Pongal Celebrayion | Pollachi | Air Balloon

சென்னை: ஒரே ஒரு ஹாய் சொல்லுங்கள் என கெஞ்சும் நெட்டிசன்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் கெத்து காட்டி வருகிறார் லாஸ்லியா.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன்மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் லாஸ்லியா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார் லாஸ்லியா. மேலும் சக போட்டியாளரான இயக்குநர் சேரனை சேரப்பா சேரப்பா என்றழைத்து வந்தார்.

கடலை காதல்

சேரனும் லாஸ்லியாவை தனது மகளை போலவே பார்த்தார். ஆனால் லாஸ்லியா எப்போது வழிந்து கடலை போட தொடங்கினாரோ அப்போதே அவரின் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது. போதா குறைக்கு இருட்டில் அமர்ந்து பேட்டரியை கழட்டிவிட்டு கவினும் லாஸ்லியாவும் ரகசியமாக பேசினர்.

View this post on Instagram

spread l💗ve......................................

A post shared by Losliya Mariyanesan (@losliyamariya96) on

உருகி உருகி காதல்

இந்த வீடியோக்கள் வெளியானதால் மொத்த பெயரையும் இழந்தார் லாஸ்லியா. கவின், சேரன் குறித்து தரக்குறைவாக பேசிய போதும் அதனை கண்டுகொள்ளவில்லை லாஸ்லியா. இதனால் மக்களின் கடுப்புக்கு ஆளானார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது லாஸ்லியாவும் கவினும் உருகி உருகி காதலித்தனர்.

போட்டோ ஷுட்

ஆனால் வெளியே வந்த பிறகு அவர்கள், தங்களின் காதல் குறித்து வாயே திறக்கவில்லை. இந்நிலையில் லாஸ்லியா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் லாஸ்லியா, ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். மேலும் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட்டு வருகிறார்.

கெஞ்சும் நெட்டிசன்ஸ்

தற்போது லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைந்து காணப்படுகிறார் லாஸ்லியா. லாஸ்லியாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்ள், ஒரே ஒரு ஹாய் சொல்லுங்கள், ஒரே ஒரு ரிப்ளை செய்யுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.

கெத்துக்காட்டும் லாஸ்

கெத்துக்காட்டும் லாஸ்

ஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் கெத்தாக இருந்து வருகிறார் லாஸ்லியா. மேலும் கவினுடனா காதல் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் மவுனம் சாதித்து வருகிறார். மக்கள் ஓட்டுப்போட்டதால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா, இப்போது அவர்களை மதிக்கமாட்டேங்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X