Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கவின் ஃபேன்ஸ்க்கு ஹேப்பி நியூஸ்.. அடியே லாஸ்லியா.. என்ன பாப்பியா.. இருக்கு கொண்டாட்டம் இருக்கு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவின் பாடலுக்கு லாஸ்லியா நடனமாடும் தகவலால் அவர்களின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். லாஸ்லியாவின் காதலுக்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தனது பெற்றோர் காதல் திருமணம் செய்தவர்கள்தான், அவர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வேன் என தீர்க்கமாக உள்ளார் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேம் சேஞ்சர் விருது பெற்ற கவினை, மை கேம் சேஞ்சர் எனக்கூறி டிவிட்டியிருந்தார் லாஸ்லியா.
கவின் சோகம்
ஆனால் கடந்த சில நாட்களாக லாஸ்லியா, கவினுடன் பேசுவதில்லை. இதனால் கவின் சோகமாக இருக்கிறார் என தகவல் பரவி வந்தது.
கவின்பாடல்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கான ஒத்திகை பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் லாஸ்லியா, கவின் பாடிய அடியே லாஸ்லியா பாடலுக்கு நடனமாடுகிறார்.
|
ரிகர்சல் வீடியோ
இதன் ரிகர்சல் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் லாஸ்லியா. இதனை பார்த்த கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அதிகம் ஷேர்
அந்த ரிகர்சல் வீடியோவை ஏராளமானோர் லைக் செய்திருக்கின்றனர். பலர் தங்களின் பக்கங்களிலும் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.
|
இந்த பர்ஃபாமன்ஸ்
மேலும் பலர் இந்த பாடலின் பர்ஃபாமன்ஸை பார்க்கவே பிக்பாஸ் கொண்டாட்டத்தை காண காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
|
கல்யாணம் பண்ணிக்குங்க
கவினும் நீங்களும் சேர்ந்து ஒன்னா ஒரு டான்ஸ் பண்ணலாமே கவிலியா.. உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். சீக்கிரம் ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா ஒரு படம் நடிங்க, எதிர்காலத்துல ரெண்டு பேரும் கல்யாணம் பணிக்குங்க, லைஃப் நல்லா இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.
அடியே லாஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பாத்ரூம் ஸோனில் வைத்து லாஸ்லியாவை பார்த்து முதல் முறையாக கவின் அடியே லாஸ்லியா.. என்ன பாப்பியா.. உன் மனசு என்ன காஸ்ட்லியா.. என்று பாடினார்.
வைரலான வீடியோ
அதற்கு லாஸ்லியா டான்ஸ் ஆடினார். கவினின் இந்த பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலும் காட்சியும் அவர்களின் ஆர்மியினரால் வைரலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.