வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் பாத்டப் குளியல் வீடியோ.. அந்த விஷயத்துக்காக.. இப்படியா?

சென்னை: நடிகை லாஸ்லியாவும் சோப்பு விளம்பரத்துக்கு வந்துட்டாங்க. பாத் டப்பில் சோப்பு போட்டு குளிக்கும் அவரது வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா, போன சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளார்.

கைவசம் தற்போது 3 படங்களில் நாயகியாக நடித்து வரும் லாஸ்லியா விளம்பரப் படங்களிலும் நடிக்கத் துவங்கி விட்டார்.

இலங்கை அழகி

இலங்கை அழகி

இலங்கையில் செய்திவாசிப்பாளராக கலக்கி வந்த நடிகை லாஸ்லியா, பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ஓவியாவுக்கு அடுத்து மிகப்பெரிய ஆர்மியை உருவாக்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் செய்தி வாசிப்பாளராக சில டாஸ்க்குகளில் ஈழத் தமிழில் இவர் பேசியதை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

ஸ்பெஷல் கெஸ்ட்

ஸ்பெஷல் கெஸ்ட்

வரும் அக்டோபர் 4ம் தேதி பிக்பாஸ் தமிழ் சீசன் 4 பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகை லாஸ்லியா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட போன சீசன் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. வரும் ஞாயிற்றுக் கிழமை அந்த நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

ஸ்டார்ட் மியூசிக்

ஸ்டார்ட் மியூசிக்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் எனும் காமெடி கலாட்டா நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை லாஸ்லியா கலந்து கொண்டு செம ரகளை செய்தார். விஜய் டிவி ஏகப்பட்ட நடிகர்களை திரைத்துறைக்கு ஏற்றுமதி செய்ததை போல நடிகை லாஸ்லியாவும் தற்போது பிரபலமாக்கி உள்ளது. அதனால், விஜய் டிவியை மறக்காமல் அதன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் லாஸ்லியா.

சோப்பு விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு இரண்டு படங்களில் ஹீரோயினாக புக் ஆன லாஸ்லியா, இப்போ மூன்றாவது படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளர். இந்நிலையில், நடிகை லாஸ்லியா நடித்த சோப்பு விளம்பரம் வெளியாகி அவரது ரசிகர்களை பரவச படுத்தி வருகிறது. அந்த விளம்பரத்தில் அவ்வளவு அழகு ரதியாக மின்னுகிறார் நம்ம லியா பேபி.

பாத்டப்பில் குளியல்

பாத்டப்பில் குளியல்

அதிலும் ஆடை ஏதும் அணியாமல் பாத் டப்பில் தனது கவர்ச்சி மேனியை காட்டியபடி சோப்பு போட்டு குளிக்கும் நடிகை லாஸ்லியாவின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து ஸ்தம்பித்தே போய் விட்டனர். இனி இதுபோல ஏகப்பட்ட விளம்பரப் படங்களில் அடிக்கடி டிவியில் நடிகை லாஸ்லியா தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்கும்.

என்ன சோப்

என்ன சோப்

மசாலா பொருட்களை தயாரித்து வந்த ஆச்சி நிறுவனம், தற்போது சோப்பு ஒன்றை தயாரித்துள்ளது. அதன் விளம்பரப் படத்தில் தான் நடிகை லாஸ்லியா நடித்துள்ளார். Blesso என பெயரிடப்பட்ட அந்த சோப்பின் விலை 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அழகு தேவதை லாஸ்லியாவை சோப்பு விளம்பரத்திற்காக குளியல் காட்சியில் பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் தெறிக்கவிடுகின்றனர்.

சினிமா

சினிமா

ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்து வரும் பிரண்ட்ஷிப் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் லாஸ்லியா. அடுத்ததாக நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் லாஸ்லியா மற்றும் சிருஷ்டி டாங்கே நாயகிகளாக நடித்து வருகின்றனர். ஓ மை கடவுளே படத்தை தயாரித்த ஆக்சஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்திலும் லாஸ்லியா ஒப்பந்தமாகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X