அட ஆமாங்க.. லாஸ்லியா அப்பா நிஜமாவே சேரன் மாதிரியேத்தான் இருக்காரு.. வைரலாகும் போட்டோ!

லாஸ்லியாவின் தந்தை என ஒருவரது புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சென்னை: இயக்குனர் சேரனும், லாஸ்லியாவின் தந்தையும் ஒரே மாதிரியாக இருப்பதாகக்கூறி ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் பெரும்பான்மை ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர் லாஸ்லியா. இவர் தான் டைட்டில் வின்னராவார் என இப்போதே ஆரூடம் சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள். ஓவியாவைப் போல், அவருக்கும் ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.

Losliyas father and director look alike

அதற்கு ஏற்றார் போல், பிக் பாஸ் கூட லாஸ்லியா ஆதரவாளராகவே தெரிகிறார். மைனம்மா கதையில் தொடங்கி, கவின் பிரச்சினை வரை லாஸ்லியாவுக்கு தான் பிக் பாஸின் ஆதரவு இருந்திருக்கிறது.

தான் உண்டு தனது வேலை உண்டு என இருக்கும் லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் வீட்டில் மிகவும் பிடித்த நபர் சேரன். அவரை அப்பா ஸ்தானத்தை வைத்திருக்கிறார் லாஸ்லியா. சேரனை எப்போதும் சேரப்பா என்று தான் அழைக்கிறார்.

எந்த ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், சேரனிடம் தான் சொல்கிறார். அவரது தோளில் சாய்ந்து தான் அழுகிறார் லாஸ்லியா. இதற்கு அவர் சொல்லும் முக்கிய காரணம் தனது தந்தையின் சாயலில் சேரன் இருப்பதாகக் கூறுவது தான்.

இந்நிலையில், அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் ஏறக்குறைய சேரனின் ஜெராக்ஸ் மாதிரி தான் இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த புகைப்படத்தை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவேளை புகைப்படத்தில் உள்ளவர் தான் லாஸ்லியாவின் உண்மையான தந்தை என்றால், சேரனிடம் பாசம் காட்ட லாஸ்லியா கூறிய காரணங்கள் நிஜம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X