ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கை வந்த லாஸ்லியா தந்தையின் உடல்.. கதறிய குடும்பம்.. உச்சக்கட்ட சோகம்!

சென்னை: ஒரு மாதத்திற்கு பிறகு இலங்கை வந்த லாஸ்லியாவின் தந்தை மரிய நேசனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.

Recommended Video

ஒரு மாதம் கழித்து வந்த தந்தையின் சடலம்.. கதறி, கதறி அழுத லாஸ்லியா..!

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லாஸ்லியா மரியநேசன். இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க அடுத்தடுத்தது மூன்று படங்களில் கமிட்டானார் லாஸ்லியா. அவரது முதல் படமான ஃபிரண்ட்ஷிப் படத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளது.

10 ஆண்டுகளாக..

10 ஆண்டுகளாக..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது சக போட்டியாளரான இயக்குநர் சேரனை தன்னுடைய அப்பா போன்றே இருப்பதாக கூறி சேரப்பா என்று அழைத்து வந்தார். மேலும் தன்னுடைய அப்பா மரிய நேசன், தங்களுக்காக கடந்த 10 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து கனடாவில் பணிபுரிந்து வருவதாகவும் பலமுறை கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில்..

பிக்பாஸ் வீட்டில்..

தன்னுடைய அப்பாவை நேரில் பார்த்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறி கண்ணீர் விட்டார். இதனை தொடர்ந்து லாஸ்லியாவின் அப்பாவை சொந்த செலவில் பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது விஜய் டிவி.

கதறி அழுத லாஸ்லியா

கதறி அழுத லாஸ்லியா

இதானல் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் வீட்டில் வைத்து தனது அப்பாவை சந்தித்தார் லாஸ்லியா. அப்போது அவரது அப்பாவை பார்த்து லாஸ்லியா கதறி அழுதது பெரும் வைரலானது.

மரணமடைந்த மரியநேசன்

மரணமடைந்த மரியநேசன்

அந்தக் காட்சி இன்னமும் பலரது கண்களைவிட்டு மறையவில்லை. இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி கனடாவில் தான் தங்கியிருந்த அறையில் சடலமாக மீட்கப்பட்டார். படுக்கையில் சடலமாக கிடந்த மரியநேசனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தூக்கத்திலேயே மாரடைப்பு

தூக்கத்திலேயே மாரடைப்பு

தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரிய நேசனின் உயிர் பிரிந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. சென்னையில் படப்பிடிப்புக்காக தங்கியிருந்த லாஸ்லியா, தனது தந்தை உயிரிழந்த தகவலை அடுத்த பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவியின் உதவியுடன் இலங்கை சென்றார்.

உடல் வருவதில் தாமதம்

உடல் வருவதில் தாமதம்

கொரோனா லாக்டவுன் காரணமாக இலங்கை கொழும்புவில் உள்ள ஒரு ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார் லாஸ்லியா. இதே கொரோனா காரணமாக மரிய நேசனின் உடல் கனடாவில் இருந்து இலங்கை வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.

வீட்டிற்கு வந்த உடல்

வீட்டிற்கு வந்த உடல்

இந்நிலையில் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு லாஸ்லியாவின் தந்தை மரிய நேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திரிகோணமலை நகரில் உள்ள அவரது வீட்டில் மரியநேசனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளாது.

கோட் சூட்டுடன்..

கோட் சூட்டுடன்..

கிறிஸ்தவ முறைப்படி மரியநேசனின் உடலுக்கு கோட் சூட், கழுத்தில் டை, கைகளில் க்ளவுஸ் என அணிவிக்கப்பட்டு மல்லிப் பூ மாலையும் போடப்பட்டுள்ளது. வெள்ளை நிற துணியால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

கதறியழுத குடும்பம்

கதறியழுத குடும்பம்

வேலைக்காக வெளிநாடு சென்ற தங்களின் அப்பா சடலாமாக, அதுவும் ஒரு மாதத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்ததை பார்த்து லாஸ்லியாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இறுமி அஞ்சலி மற்றும் இறுதி சடங்குகளுக்கு பிறகு அப்பகுதியில் உள்ள கல்லறையில் மரியநேசனின் உடல் அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஸ்லியா பகிர்ந்த போட்டோ

லாஸ்லியா பகிர்ந்த போட்டோ

இதனிடையே தனது தந்தையின் புகைப்படத்தை பூச்செண்டுகளால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருக்கும் போட்டோவை லாஸ்லியா தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X