படுக்கையில் சடலமாக கிடக்கும் லாஸ்லியாவின் அப்பா.. அருகில் இருக்கும் கடிதம்.. தீயாய் பரவும் வீடியோ!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை படுக்கையில் சடலமாக கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya வின் தந்தைக்கு 52 வயதுதான்! நடந்தது என்ன? | RIPMariyanesan

விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமானவர் லாஸ்லியா மரியநேசன்.

இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு திரைப்படங்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹாட் அன்ட் க்யூட் போட்டோஸ்

ஹாட் அன்ட் க்யூட் போட்டோஸ்

ஹர்பஜன் சிங்குடன் ஃபிரண்ட்ஷிப் மற்றும் நடிகர் ஆரியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் லாஸ்லியா. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள லாஸ்லியா, அவ்வப்போது தனது க்யூட் மற்றும் ஹாட்டான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

தீயாய் பரவிய தகவல்

தீயாய் பரவிய தகவல்

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தையான மரியநேசன், நேற்று முன்தினம் இரவு திடீரென மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. அவரது மரணத்தை கேட்டு ரசிகர்கள் பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பொறுப்பான அப்பா

பொறுப்பான அப்பா

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது மகளை காண பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் மரியநேசன். 10 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகளை பார்த்த போதும், கவினுடனான அவரது காதல் பிடிக்காததால் பொறுப்பான அப்பாவாக தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அப்பா பேச்சை கேளுங்கள்

அப்பா பேச்சை கேளுங்கள்

தொடர்ந்து கவினையும் ஆரத்தழுவி அட்வைஸ் கூறினார். ஒரு பர்ஃபெக்ட் அப்பாவாக நடந்து கொண்டார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். அவரது பாசத்தை பார்த்த பலரும் லாஸ்லியாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பா பேச்சைக் கேட்கும்படி கூறினர்.

மரணத்திற்கான காரணம்

மரணத்திற்கான காரணம்

அவரது திடீர் மரணம் லாஸ்லியாவின் ரசிகர்களையும் பிக்பாஸ் ரசிகர்களையும் உலுக்கியது. மரியநேசனின் மறைவுக்கு இயக்குநர் சேரன் உட்பட பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். கனடாவில் உயிரிழந்தார் மரியநேசன். அவரது மறைவுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

படுக்கையில் சடலமாக..

படுக்கையில் சடலமாக..

இந்நிலையில் மரியநேசன் படுக்கையில் குப்புற படுத்தப்படி சடலமாக கிடக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் மரியநேசன் காவி நிற போர்வையால் போர்த்தியப்படி மரணித்துக் கிடக்கிறார்.

பெட்டில் கடிதம்?

பெட்டில் கடிதம்?

பெட்டில் டேப், செல்போன்கள் மற்றும் வெள்ளை காகித கடிதம் ஒன்றும் உள்ளது. அப்போது அருகில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் அவரது உடலை பார்த்தப்படி எப்போடா அவரு உன்கூட பேசினார் என ஈழத்தமிழில் கேட்க நேத்துதான் பேசினார் என்று பதில் சொல்கிறார்.

ஈழத்தமிழில் பேசும் நபர்கள்

ஈழத்தமிழில் பேசும் நபர்கள்

எத்தனை மணிக்கு பேசினார் என அந்த நபர் கேட்க நேத்து 2 மணிக்கு வேலையை முடிச்சுட்டு படுக்கும் போது பேசினேன் என்கிறார். மேலும் 6 மணிக்கு பிறகு போன் பண்ணினேன், அவர் எடுக்கவில்லை என்பதால் ரூமில் வந்து பார்த்தேன். அவர் இறந்து கிடக்கிறார் என்று கூறுகிறார்.

அவரே எழுதினாரா?

அவரே எழுதினாரா?

அவரது படுக்கையில் உள்ள கடிதம், மரியநேசன் யாருக்காவது எழுதினாரா? இல்லை வேறு யாராவது அவருக்கு எழுதினார்களா என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மரியநேசன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது இயற்கை மரணமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.

உடலை கொண்டுவருவதில் சிக்கல்

உடலை கொண்டுவருவதில் சிக்கல்

மரியநேசன் சடலமாக கிடக்கும் இந்த வீடியோ பலரையும் கலங்க வைத்துள்ளது. இதனிடையே கொரோனா பெருந்தொற்று காரணமாக கனடாவில் இருந்து அவரது உடலை இலங்கை கொண்டு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை செல்ல உதவி

இலங்கை செல்ல உதவி

இதனால் அவரது உடல் இலங்கை வருவதற்கு சில நாட்கள் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனிடையே சென்னையில் இருந்து லாஸ்லியா இலங்கை செல்வதற்கு விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் 3 போட்டியாளர்கள் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X