லாஸ்லியா அப்பா மரியநேசனின் திடீர் மரணத்திற்கான காரணம்.. தீயாய் பரவும் பகீர் தகவல்!

சென்னை: லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் திடீர் மரணத்திற்கான காரணம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

Losliya வின் தந்தைக்கு 52 வயதுதான்! நடந்தது என்ன? | RIPMariyanesan

பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா, இலங்கையை சேர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக இருந்த அவர் தற்போது நடிகையாகி விட்டார்.

தமிழில் அடுத்தடுத்து மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா. இதற்கான படப்பிடிப்புகள் நடைபெறுவதால் சென்னையில் தங்கியுள்ளார் லாஸ்லியா.

கனடாவில் பணி

கனடாவில் பணி

லாஸ்லியாவுக்கு அப்பா அம்மா மற்றும் இரண்டு இளம் சகோதரிகள் உள்ளனர். அனைவரும் இலங்கையில் வசித்து வருகின்றனர். லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் கடந்த சில ஆண்டுகளாக கனடாவில் பணியாற்றி வந்தார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு

10 ஆண்டுகளுக்கு பிறகு

10 ஆண்டுகளுக்கும் மேலாக கனடாவில் பணிபுரிந்து வந்த மரியநேசன், 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் போதுதான் தனது மகள் லாஸ்லியாவை நேரில் பார்த்தார்.

இடியாய் இறங்கியது

இடியாய் இறங்கியது

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீரென உயிரிழந்தார். மரிய நேசனின் மறைவு செய்தி ரசிகர்களை உலுக்கியது. அப்பா மீது பேரன்பு கொண்டிருந்த லாஸ்லியாவுக்கும் இந்த செய்தி இடியாய் இறங்கியது.

இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு

இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு

லாஸ்லியா சென்னையில் இருந்ததால் அவரை அவரது குடும்பத்துடன் சேர்க்க இலங்கைக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை விஜய் டிவியும் பிக்பாஸ் சீசன் 3 பிரபலங்களும் செய்து கொடுத்தனர்.

குப்புற படுத்தப்படி

குப்புற படுத்தப்படி

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன், கனடாவில் தான் தங்கியிருக்கும் வீட்டின் பெட்ரூமில் சடலமாக கிடக்கும் வீடியோ நேற்று வெளியானது. பெட்டில் குப்புற படுத்திருந்த அவர் அப்படியே மரணித்து கிடந்தார்.

உண்மையிலேயே கடிதம் தானா?

உண்மையிலேயே கடிதம் தானா?

அருகில் டேப், செல்போன், ரிமோட் மற்றும் லெட்டர் ஒன்றும் இருந்தது. அந்த வீடியோ பெரும் வைரலானது. அதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அவருக்கு அருகில் இருக்கும் வெள்ளை பேப்பர் உண்மையிலேயே கடிதம் தானா? அவர் தற்கொலை செய்து கொண்டாரா என பல கேள்விகளை எழுப்பினர்.

தூக்கத்தில் மாரடைப்பு

தூக்கத்தில் மாரடைப்பு

இந்நிலையில் மரியநேசனின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வேலையை முடித்துவிட்டு தனது அறைக்கு வந்து படுத்துள்ளார் மரியநேசன். அப்போது தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிர் பிரிந்ததாக அவரது நண்பர்கள் கூறியதாக தகவல் பரவி வருகிறது.

ரசிகர்கள் வேதனை

ரசிகர்கள் வேதனை

மூன்று பெண் பிள்ளைகளுக்கு தந்தையான மரியநேசன், ஒருத்தருக்கு கூட திருமணம் செய்து வைக்காமல் அகால மரணமடைந்துள்ளார். லாஸ்லியா சினிமாவில் நடித்து வரும் நிலையில் அவரது நடிப்பில் ஒரு படத்தை கூட அவர் பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

உடல் வருவதில் தாமதம்

உடல் வருவதில் தாமதம்

இதனிடையே மரியநேசனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர தூதரகத்தின் மூலம் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், கொரோனா பெருந்தொற்று காரணமாக உடலை கொண்டு வருவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X