வாழ்க்கையில எல்லாம் வந்து போகும்.. வைரலாகும் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் வீடியோ! #Losliya

சென்னை: நடிகை லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Losliya விற்கு ஆறுதல் சொன்ன சேரப்பா | RIPMariyanesan

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இலங்கை தொலைக்காட்சி சேனலில் பணிபுரிந்து வந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகையாகி விட்டார்.

ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து ஆரியுடனும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் லாஸ்லியா.

மறைவுக்கு இரங்கல்

மறைவுக்கு இரங்கல்

இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்று திடீரென காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அவரது மரணத்தை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. சமூக வலைதளங்களில் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

இதனால் #Losliya மற்றும் #RIPMariyanesan ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. பலரும் மரியநேசனின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மரியநேசனின் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்நிலையில் மரியநேசன் பிக்பாஸ் வீட்டில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சீசனில் லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ஃபிரீஸ் டாஸ்க்கின் போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் மரியநேசன்.

கவினை சமாதானப்படுத்தி..

கவினை சமாதானப்படுத்தி..

அப்போது கவினை லாஸ்லியா காதலித்ததால் மகள் மீது கோபத்தில் இருந்த மரியநேசன், அவரது முகத்தை கூட பார்க்காமல் கோபத்தை காட்டினார். மேலும் தன்னுடைய கோபத்தை பார்த்து மிரண்டு போன கவினையும் அழைத்து சமாதானப்படுத்தினார் மரிய நேசன்.

எல்லாம் வந்து போகும்

எல்லாம் வந்து போகும்

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கவினை அழைத்து கட்டியணைத்து பேசிய மரியநேசன், டோன்ட் வொர்ரி.. வாழ்க்கையில எல்லாம் வந்து போகும்.. எல்லாம் ரெடி பண்ணி ரெடியா வாங்க என கூறுகிறார்.

முகம் வாடிப்போயிருக்கு..

மேலும் என்ன முகம் வாடிப்போயிருக்கு என்று கவினின் கன்னத்தையும் தட்டிக்கொடுத்தார் மரியநேசன். மரியநேசனின் இந்த வீடியோவை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்

பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்

ஒரு பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் இப்போது நம்முடன் இல்லை.. இன்னமும் என் இதயம் சொல்கிறது அது ஒரு வதந்தியாக இருக்க வேண்டும் என்று. லாஸ்லியாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் கடவுள் தைரியத்தை கொடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X