லாஸ்லியா கதாநாயகியாக அறிமுகமாகும் ஃப்ரெண்ட்ஷிப்.... ரிலீஸ் அப்டேட் வெளியானது!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய லாஸ்லியா இப்பொழுது தமிழில் பல படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

அவ்வகையில் தமிழில் ஹீரோயினியாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு ஃப்ரெண்ட்ஷிப் என டைட்டில் வைக்கப்பட்டிருக்க இதில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ஆக்சன் கிங் அர்ஜுன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அனைத்து கட்டப் பணிகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை ரசிகர்கள் மிக ஆர்வமாக எதிர்பார்த்து இருக்க இப்பொழுது அதிகாரபூர்வ ரிலீஸ் அப்டேட் லாஸ்லியா அறிவித்துள்ளார்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பாலிவுட்டில் பெரும் வரவேற்ப்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த சில வருடங்களாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். முதல் சீசனில் இருந்தே ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் வந்த நிகழ்ச்சி இப்பொழுது 5 சீசன்களை கடந்துள்ளது.

லாஸ்லியா

லாஸ்லியா

இதில் 3வது சீசன் ரசிகர்களுக்கு மிகவும் ஸ்பெஷல் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் என்டர்டைன் பண்ண வைத்தது பிக் பாஸ் சீசன் 3. இதில் போட்டியாளர்களாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஒரே நேரத்தில் என்ட்ரி கொடுத்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தனர்.

செய்தி வாசிப்பாளராக

செய்தி வாசிப்பாளராக

இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்த லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனார். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்திலிருந்து மீடியாவிற்கு வந்து எதையாவது சாதிக்க வேண்டும் என கடுமையாக போராடிக்கொண்டிருந்த லாஸ்லியாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

சிறப்பாக விளையாடி

சிறப்பாக விளையாடி

எதையும் பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும் லாஸ்லியா பிக் பாஸ் சீசன் 3 ல் சக போட்டியாளர்களாக இருந்த கவின், சாண்டி, முகின்ராவ், தர்ஷன் ஆகியோருடன் இணைந்து மிகவும் சிறப்பாக விளையாடி அனைவரது மனங்களையும் வென்றார். மேலும் கவின் உடன் காதல் ஏற்பட்டது மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளானது.

மக்கள் செல்வாக்கு

மக்கள் செல்வாக்கு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போதே இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் லாஸ்லியாவை தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக கூறியிருந்தார். தொடர்ந்து லாஸ்லியாவுக்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன .

ஃப்ரெண்ட்ஷிப்

ஃப்ரெண்ட்ஷிப்

பிக் பாஸ் டைட்டிலை வெல்ல அனைத்து தகுதிகள் இருந்தும் இறுதிச்சுற்று வரை சென்று வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியான உடனேயே எதிர்பார்த்தது போலவே ஃப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனார்.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் கதாநாயகனாக தமிழில் அறிமுகமாக ஆக்சன் கிங் அர்ஜுன், சதீஷ் முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடிக்கின்றனர் . ஃப்ரெண்ட்ஷிப்பை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் லாஸ்லியா ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாவது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் பாடி பாடகியாகவும் அறிமுகமாகிறார்.

ஆதாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

ஆதாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

ஜான் பால் ராஜ் மற்றும் ஷ்யாம் சூர்யா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படத்திற்கு எக்கச்சக்க வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க டீசர் வெளியாகி சக்கை போடு போட்டது. மேலும் இப்படத்தின் பாடல்களை லஹாரி மியூசிக் வாங்கி உள்ளது. பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே வெளியாக தயாராக இருந்த இப்படம் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே இருக்க இப்பொழுது இப்படத்தின் ஆதாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

50 சதவீத இருக்கைகளுடன்

50 சதவீத இருக்கைகளுடன்

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என அனுமதி அளித்ததன் படி திரையரங்குகளும் திறக்கப்பட்டு திரைப்படங்களும் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் கொரோனா இரண்டாவது ஆலை மிக மோசமாக பரவி திரையரங்குகளை மீண்டும் மூட வைத்தது. திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளதால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் உட்பட அனைத்து திரைப்படங்களும் ஒவ்வொன்றாக ஓடிடியில் வெளியிடப்பட்டு வந்தது.

கட்டாயமாக திரையரங்கில்

கட்டாயமாக திரையரங்கில்

ஆனால் ஃப்ரெண்ட்ஷிப் கட்டாயமாக திரையரங்கில் மட்டும்தான் வெளியிடுவோம் என தீர்மானமாக படக்குழு இருந்தது. இப்பொழுது கொரோனா பரவல் குறைந்து இயல்பு நிலைக்கு மாறிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் தகுந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி ஆகஸ்ட் 23ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து இதுவரை இலவு காத்த கிளி போல காத்துக்கொண்டு இருந்த தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை வெளியிட போட்டி போட்டுக் கொண்டு உள்ளனர்.

U/A சான்றிதழ்

U/A சான்றிதழ்

அந்த வகையில் இப்பொழுது ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படமும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என்ற அசத்தலான அப்டேட்டை லாஸ்லியா வெளியிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே குடும்பத்துடன் இப்படத்தை விரைவில் திரையில் கண்டுகளிக்க ரசிகர்கள் தயாராகிக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X