என்ன லாஸ்லியாவை சுற்றி இத்தனை பேர் நிக்குறாங்க.. ஓ படக்குழுவா? அர்ஜுன் சார் ரியாக்ஷன் எபிக்!
சென்னை: பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்து வரும் பிரெண்ட்ஷிப் படக்குழுவின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
இலங்கை செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக்பாஸ் சீசனில் நடிகை ஓவியாவுக்கு பிறகு அதிகளவு ஆர்மி லாஸ்லியாவுக்குத்தான் உருவானது.

இரண்டு படம்
பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற லாஸ்லியாவை பார்க்கத்தான் பல ரசிகர்கள், போன சீசனையே பார்த்தார்கள் என்று சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில், அவருக்கு கிடைத்த பிரபலம், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த உடனே அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆக உதவி செய்தது. ஹர்பஜன் சிங்குடன் பிரெண்ட்ஷிப் மற்றும் ஆரியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பவுலரும், ட்விட்டரில் தமிழ் புலவருமாக வலம் வந்து கொண்டிருந்த ஹர்பஜன் சிங், சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் மூலம் தமிழ் சினிமா பக்கம் கரை ஒதுங்கினார். உடனடியாக லாஸ்லியா நடிக்கும் பிரெண்ட்ஷிப் படத்திலும் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

பிரெண்ட்ஷிப் நடிகர்கள்
சென்னையில் ஒருநாள் 2 மற்றும் அக்னி தேவி படங்களை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சுந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பிரெண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன் சிங் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக லாஸ்லியாவும் நடித்து வருகின்றனர். மேலும், ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
லாஸ்லியாவை சுற்றி
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பிரெண்ட்ஷிப் படக்குழுவினர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், லாஸ்லியாவை சுற்றி அனைவரும் நிற்கின்றனர். நடிகர் அர்ஜுன், வேறு யாரையோ லுக் விடும் போது இந்த போட்டோ க்ளிக் செய்யப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











