twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றி பேசும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம்!

    |

    சென்னை : அறிமுக இயக்குனர்கள் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் ஃப்ரெண்ட்ஷிப்.

    பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இதில் லீட் ரோலில் நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    மருமகன் விபத்தில் சிக்கியதும் துடித்துப் போன மாமா பவன் கல்யாண்.. மருத்துவமனையில் கூடிய குடும்பம்மருமகன் விபத்தில் சிக்கியதும் துடித்துப் போன மாமா பவன் கல்யாண்.. மருத்துவமனையில் கூடிய குடும்பம்

    பெண்கள் மீதான பாலியல் அத்து மீறல்கள் மற்றும் வன்முறை குறித்து பேசும் படமாக ஃப்ரெண்ட்ஷிப் உருவாகி உள்ளது.

    ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார்

    ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ளார்

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்த ஹர்பஜன்சிங் இப்பொழுது தமிழ் சினிமாவில் நடித்து நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான டிக்கிலோனா திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றி இருப்பார். இந்த நிலையில் அறிமுக இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியிருக்கும் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

    அறிமுகப்படமே வித்தியாசமான கதையில்

    அறிமுகப்படமே வித்தியாசமான கதையில்

    கல்லூரி கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ஹர்பஜன் கதாநாயகனாக நடிக்க பிக்பாஸ் புகழ் லாஸ்லியா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு பின் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய லாஸ்லியா ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முதல் திரைப்படமே வித்தியாசமான கதையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்ற இருக்கிறார்.

    அர்ஜுன் வில்லன் ரோலில்

    அர்ஜுன் வில்லன் ரோலில்

    தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன் இரும்புத்திரையில் வில்லனாக மிரட்டி இருப்பார் . அதேசமயம் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்க இதிலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை

    பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை

    கலகலப்பான கல்லூரி கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் மையக் கருவாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றி மிக அழுத்தம் திருத்தமாக பேச வருகிறது. லாஸ்லியா,ஹர்பஜன் சிங், அர்ஜுன், சதீஷ்,விஜய் டிவி வெட்டிகிளி பாலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ள ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் மிக விரைவிலேயே திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    English summary
    Harbajan Singh and Losliya’s Friendship story strongly talks about Sexual Harrasment. Action King Arjun played as a baddie in this upcoming movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X