பிக் பாஸுக்காகத் தான் கவினை காதலிப்பதுபோல் லாஸ்லியா நடித்தார்.. தோழிகள் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

கவிலியா காதல் ஒரு நாடகம் என லாஸ்லியாவின் தோழிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss Kondattam : மேடையை தெறிக்க விடும் முகேன்,கவின் நடனம்

சென்னை: லாஸ்லியா கவினை நிஜமாகவே காதலிக்கிறாரா என்பது குறித்து அவரது தோழிகள் அளித்துள்ள பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சினிமா காதல் ஜோடி '96' படத்தின் ராம் - ஜானு தான். தற்போது அதைவிட அதிகமாக கொண்டாடப்பட்டு வருகிறது கவிலியா காதல்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் ஹைலைட்டே கவிலியா காதல் தான். 'தனனனனானே.. தனனானா தனதனனானா,, தனதானானா'.. என ஜி.வி.பிரகாஷை பின்னணி வாசிக்கவிட்டு, ஆடுகளம் தனுஷ், டாப்சி ரேஞ்சுக்கு, கவினும், லாஸ்லியாவும் கைப்பிடித்து நடந்து வந்த புரொமோவை கவிலியா ஆர்மி இன்னமும் தங்கள் பேவரைட் வீடியோவாக வைத்திருக்கிறது.

கவிலியா காதல்

கவிலியா காதல்

காதல், காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை என காதலை கொண்டாடிய தமிழ் சினிமாவையே மிஞ்சும் படியாக படமாக்கப்பட்டிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் கவிலியா காதல். முதலில் மோதல், பின்னர் காதல், தத்து அப்பா, நிஜ அப்பா எதிர்ப்பு, கமலின் கண்டிப்பு, பிரிவால் பரிதவிப்பு, கண்ணீர் கதறல் என அனைத்து எமோஷன்களும் கலந்துகட்டி ஆடியன்ஸை கலங்கடித்தன.

குழப்பம்

குழப்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கவின் வெளியேறிய போது, சிவப்பு கதவில் கையை வைத்து லாஸ்லியா தடுத்த காட்சி கவிலியா ஆர்மியின் நெஞ்சங்களில் இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த கவிலியா காதலின் க்ளைமாக்ஸ் தான் 'சொல்ல மறந்த கதை'யாக இருந்தது. கவினும், லாஸ்லியாவும் உண்மையிலேயே காதலித்தார்களா, இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக அப்படி நடந்துகொண்டார்களே எனும் குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

இலங்கை பறந்த லாஸ்லியா

இலங்கை பறந்த லாஸ்லியா

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவினும், லாஸ்லியாவும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசவில்லை என்றே தெரிகிறது. பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி படமாக்கப்பட்டபோது கூட தனித்தனியே தான் அமர்ந்திருந்தனர். மேலும், லாஸ்லியா மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு இலங்கைக்கு திரும்பிவிட்டார். இதனால் கவிலியா ஆர்மி ரொம்பவே ஷாக்காகி போனது.

அதிர்ச்சி

இலங்கை சென்ற லாஸ்லியா தனது தோழிகளைச் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், சிங்கிள்ஸ் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுவும் ரசிகர்களை ரொம்பவே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிக் பாஸுக்காக நடிப்பு

பிக் பாஸுக்காக நடிப்பு

அதோடு, ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ‘கவிலியா காதல் உண்மையானது இல்லை' என லாஸ்லியாவின் தோழிகள் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. லாஸ்லியாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, சிலர் கவின், லாஸ்லியா காதல் பற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்கள், அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நடித்தது என தெரிவித்துள்ளனர்.

மௌனம் காக்கும் கவின்

மௌனம் காக்கும் கவின்

லாஸ்லியா தோழிகளின் இந்த பதிலால் கவிலியா ஆர்மியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பொய்யான காதலுக்காக இத்தனை நாட்கள் மரியாதை கொடுத்து வந்தோம் என அவர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் கவினோ, லாஸ்லியாவே இதுகுறித்து தற்போது வரை எதுவும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X