அது ஏன் ஆத்தா வாயில அவ்வளவு மைய்யி.. கவுண்டமணி ரேஞ்சில் லாஸ்லியாவை கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்றபோது சக போட்டியாளரான கவினை காதலித்தார். ஆனால் இந்த காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்பா எதிர்ப்பு
பத்தாண்டுகளுக்கு பிறகு மகளை பார்த்த போதும் அவர், கவினை காதலித்த காரணத்தால் வெறுப்புடன் நடந்து கொண்டார் அவரது அப்பா மரியநேசன். அவர் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் கவினுடன் நெருக்கமாக இருந்து வந்தார் லாஸ்லியா.

ஃபிரண்ட்ஷிப்
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு, லாஸ்லியா கவினுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். கவினுடனான காதல் முறிந்ததாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து தமிழில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஃபிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா.

கமெண்டுகள்
அவ்வப்போது தனது கலக்கல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் லாஸ்லியா. சினிமா வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக அவர் விதவிதமான போட்டோக்களை ஃபுல் மேக்கப்பில் வெளியிட்டு வருகிறார். அதனை பார்த்து பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

அப்பி வைத்துள்ளார்
அந்த வகையில் தற்போது அவர் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர். அந்த போட்டோவில் லிப்ஸ்டிக்கை உதட்டில் அப்பி வைத்துள்ளார் லாஸ்லியா. ஹேர் கலரிங் செய்தும் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.

கையில்லாம் ஒட்டியிருக்கு
அதனை பார்த்த நெட்டிசன்கள், உதட்டில் ஏன் இவ்ளோ மைய்யை அப்பியிருக்க பாப்பா என கேட்டு கலாய்த்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள் தலையில அடிச்ச கலரு கையிலல்லாம் ஒட்டியிருக்கு பாருங்க அக்கா என கிண்டலடித்து வருகின்றனர்.

பாராசிட்டமால் போடுங்க
சில நெட்டிசன்கள் லியா மனசுல கவின் என்றும் உங்களுக்கும் கவினுக்கும் எப்போது கல்யாணம் என்றும் கேட்டு வருகின்றனர். டிவிட்டரிலும் இதே போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் லாஸ்லியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், தலைவலியா பாராசிட்டமால் ஒன்று போடுங்கள் தலைவலி சரியாகிவிடும் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











